Published:Updated:

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்காவிட்டால் தாக்குதல்: மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை!

விகடன் விமர்சனக்குழு

திருவனந்தபுரம்: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை மீட்காவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என கேரள அரசுக்கு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவோயிஸ்டுகள் பெயரில் ஊடகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ''பழங்குடியின மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததாலேயே திருநெல்லியிலுள்ள ஹோட்டல் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதேபோல் ஏராளமான சொகுசு விடுதிகள், பழங்குடியின மக்களின் நிலங்களில் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு, கேரள அரசு துணை போகிறது. அதனால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு பழங்குடியின மக்களிடம் கேரள அரசு ஒப்படைக்காவிட்டால், மீண்டும் தாக்குதல் தொடரும்" என்று அதில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.