Published:Updated:

கோட்சேவை போற்றுவது வன்முறைக்கு வித்திடும்: காந்தி பேரன் கருத்து!

விகடன் விமர்சனக்குழு
கோட்சேவை போற்றுவது வன்முறைக்கு வித்திடும்: காந்தி பேரன் கருத்து!
கோட்சேவை போற்றுவது வன்முறைக்கு வித்திடும்: காந்தி பேரன் கருத்து!
கோட்சேவை போற்றுவது வன்முறைக்கு வித்திடும்: காந்தி பேரன் கருத்து!

இந்தூர்: கோட்சேவை போற்றுவது வன்முறைக்கு வித்திடும் செயலாகும் என காந்தியின் கொள்ளுபேரன் துஷார் காந்தி கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கேட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை எழுப்பப்படும் என இந்து மகா சபை தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடங்களையும் தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், கோட்சேவை போற்றுவது வன்முறைக்கு வித்திடும் என மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி (55) தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவர் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்தி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

மகாத்மா காந்தி அகிம்சையை கடைபிடித்து வந்தார். ஆனால் மற்றவர்கள் வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங்களை வளர்த்தனர். கோட்சேயை போற்றுவது, நாட்டின் வன்முறைக்கு வித்திடும் செயலாகும்'' என்றார்.