Published:Updated:

`உள்ளாட்சித் தேர்தலில் உட்கட்சி பகை!' -ராமநாதபுரம் அ.தி.மு.க ஒ.செ-வைக் கொல்ல வந்த கூலிப்படை

ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், 9-வது வார்டு ஒன்றிய கவுன்சில் வேட்பாளருமான அசோக்குமாரைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீஸாரிடம் சிக்கினர்.

ஒன்றியச் செயலாளர் அசோக்குமார்
ஒன்றியச் செயலாளர் அசோக்குமார்

ராமநாதபுரத்தில் உட்கட்சி மோதலின் உச்சக்கட்டமாக சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளரையே கொலை செய்யும் நோக்கத்துடன் செயல்பட்ட அ.தி.மு.க பிரமுகரை போலீஸார் தேடி வருகின்றனர்.Tpy;g

கேணிக்கரை காவல்நிலையம்
கேணிக்கரை காவல்நிலையம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 9-ந் தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற்றது. வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் வாபஸ் வாங்குதல் ஆகியன நேற்றுடன் நிறைவடைந்தன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vikatan

இந்நிலையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், 9-வது வார்டு ஒன்றிய கவுன்சில் வேட்பாளருமான அசோக்குமாரைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீஸாரிடம் சிக்கினர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தத் தேர்தலில் இவர் போட்டியிடக்கூடாது என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரனின் மருமகனான முருகன் முரளிபாபு என்பவர் கார்த்திக், கண்ணன், அருண்குமார், தயாநிதி, உலகநாதன் ஆகிய ஆறு பேர் கொண்ட கூலிப்படையை அமைத்து அசோக்குமாரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகத் தெரியவந்தது. மேலும் அசோக்குமாரைக் கொலை செய்வதற்காக வாள்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அசோக்குமார் அளித்த புகாரின்பேரில் முருகன் முரளிபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் மீதும் கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கியக் குற்றவாளியான முருகன் முரளிபாபுவை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ராமநாதபுரத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து அ.தி.மு.க வேட்பாளரைக் கொலை செய்ய அந்தக் கட்சியைச் சேர்ந்த நபரே முயற்சி செய்த சம்பவம் அ.தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.