Published:Updated:

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்; மேரி கோம் தலைமையிலான 5 பேர் மேற்பார்வைக்குழு அமைப்பு!

மேரி கோம்
News
மேரி கோம்

அடுத்த மாதத்தில் இந்த குழு அனைத்து தரப்பினருடன் பேசி, அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்; மேரி கோம் தலைமையிலான 5 பேர் மேற்பார்வைக்குழு அமைப்பு!

அடுத்த மாதத்தில் இந்த குழு அனைத்து தரப்பினருடன் பேசி, அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
மேரி கோம்
News
மேரி கோம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க, 5 பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமை வகிப்பார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை பஜ்ரங் புனியா உட்பட 30 மல்யுத்த வீராங்கனையர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கினர். 

தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளனதாகவும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ்பூஷண் சரண் சிங் நீக்கப்படும்வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். 

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜனவரி 23 திங்கள்கிழமையன்று அறிவித்தார். 

குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் தலைமையிலான இக்குழுவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனையும், மிஷன் ஒலிம்பிக் செல் உறுப்பினருமான துருப்தி முர்குண்டே, முன்னாள் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் சி.இ.ஓ ராஜகோபாலன் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

மேலும் ``பிரிஜ் பூஷண் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டாலும், அவர் மல்யுத்த கூட்டமைப்பின் எந்தப் பணியையும் செய்ய மாட்டார். அவரது பணியையும் தற்போது அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவே செய்யும். அடுத்த மாதத்தில் இந்தக் குழு அனைத்து தரப்பினருடன் பேசி, அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்'' என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்த ஏழு பேர் கொண்ட குழுவில், மேரி கோம் மற்றும் யோகேஷ்வர் தத் இருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.