Published:Updated:

ஒற்றுமையின் சிலை டிக்கெட் விற்பனையில் ரூ.5.24 கோடி மோசடி! - தணிக்கையில் சிக்கிய ஊழியர்கள்

ஒற்றுமையின் சிலை
ஒற்றுமையின் சிலை

குஜராத் மாநிலத்திலுள்ள ஒற்றுமையின் சிலையின் டிக்கெட் விற்பனையில் கிடைத்த 5.24 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குஜராத்திலுள்ள நர்மதா மாவட்டத்தில், கடந்த 2018-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சர்தார் வல்லபாய் படேலுக்கு `ஒற்றுமையின் சிலை’ என்ற நினைவுச்சின்னம் திறந்துவைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் இந்தச் சிலை ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக மாறியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒற்றுமை சிலையின் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளெல்லாம் தனியார் வங்கியின் மூலம் நியமிக்கப்பட்ட ஒரு தனியார் ஏஜென்சி பார்த்துக்கொண்டது.

ஒற்றுமையின் சிலை
ஒற்றுமையின் சிலை

இந்தநிலையில் ஏஜென்சி அதிகாரிகள், சிலை நிர்வாகத்தின் வங்கிக் கணக்கில் 5,24,77,375 ரூபாய் வரவு வைக்கப்படவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Vikatan

தனியார் வங்கியின் மேலாளர், பணம் வசூல் செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். இதன் அடிப்படையில், அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக அந்த தனியார் வங்கி பணம் வசூல் செய்ய அந்த ஏஜென்சியைப் பயன்படுத்திவந்திருக்கிறது.

ஒற்றுமையின் சிலை
ஒற்றுமையின் சிலை

சமீபத்தில் வங்கி நடத்திய தணிக்கையில் டிக்கெட் விற்பனையில் இருக்கும் பணத்துக்கும், வங்கியில் வரவுவைத்த பணத்துக்கு பெரும் வித்தியாசம் இருந்திருக்கிறது. வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஏஜென்சி ஊழியர்கள் 5.24 கோடி ரூபாயை வங்கியில் செலுத்தவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, வங்கித் தரப்பில் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது ஏஜென்சிக்கும் வங்கிக்கும் இடையிலிருக்கும் பிரச்சனை என்பதால், வங்கி சார்பிலிருந்து ஒற்றுமை சிலை வசூலுக்கான வங்கிக் கணக்கில் ரூ.5.24 கோடி வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு