ஆவடிக்கு அல்வா?

''சந்தனக் கடத்தல் வீரப்பன் செத்து ஆறு வருஷம் ஆச்சு. ஆனால், அந்தத் தேடுதல் வேட்டையில் இருந்த சில போலீஸ்காரங்களுக்கு மட்டும் பிரச்னை ஓயவே இல்லை!'' புலம்பியபடி வந்தார் மங்குனி.

மந்திரியாரின் குரலைக் கேட்டதுமே... படித்துக் கொண்டு இருந்த செய்தித்தாளை மடித்துப் போட்டுவிட்டு ஊர் வம்புக்குத் தயாரானார் மன்னர்.

''முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் 772 பேருக்கு பதவி உயர்வும், ஒரு கிரவுண்ட் இடமும் கொடுப்பதா உத்தரவு போட்டாங்க. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேருக்கு அப்படி நிலம் ஒதுக்கி அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. ஆனா, அஞ்சு வருஷம் ஆகியும் அவங்களுக்கு இதுவரை நிலத்துக்கான பட்டா வரவே இல்லை. பாதிக்கப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை. அரசின் ஆணையை மட்டும் வெச்சு என்ன பண்றதுன்னு புலம்புறாங்க.''

தலையாட்டிய மன்னர் சட்டென்று, ''கேரளாக்காரங்க அவங்க வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டாங்க பாத்தியா மங்குனி..!'' என்று ஆரம்பித்தார்.

''முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்னையில், எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமா கேரளத்துக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தப்போறதா வைகோ அறிவிச் சார். அப்போ இருந்து ஒட்டன்சத்திரத்து காய்கறி வியாபாரிகளுக்கு கேரளத்துக்காரங்க நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த விவசாயிகளிடம் காய்கறிகள் கொள்முதல் பண்ற கேரள வியாபாரிகள் நிறையப் பேர், லட்ச லட்சமா முன் பணத்தைக் கொடுத்திருக்காங்களாம். 'மறியல்'னு வைகோ சொன்னதும், அந்த வியாபாரிகள் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்டு, ஒட்டன்சத்திரத்து விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறாங்களாம். இதைக் கேள்விப்பட்டு கொந்தளிச்ச தமிழ் அமைப்புகள், 'இப்படி அடுத்தடுத்து நெருக்கடிகள் தொடர்ந்தால்... அதிரடியா கேரளத்துக்காரங்க தமிழகத்தில் நடத்தும் பிரபலமான ஃபைனான்ஸ் கம்பெனி களை முற்றுகையிட்டு முடக்குவோம்'னு முழங்குறாங்களாம்!''

''போராட்டத்தோட நோக்கமே மாறிடும்போல இருக்கே மன்னா?'' பதறினார் மங்குனி.

''மதுரை சித்திரைப் பொருட்காட்சி விவகாரத்தில் அதிகாரியை அலறவெச்ச கதை தெரியுமா?'' என்று இழுத்த மன்னர் சொன்னார்... ''பொருட்காட்சியில் ஸ்டால்கள் ஒதுக்கியதில் ஏகப்பட்ட குளறுபடிகள். மாவட்டத்துக்குப் புதுசா மாறுதலாகி வந்த அதிகாரி, இது சம்பந்தமா தோண்டித் துருவி சில விஷயங்களைக் கண்டுபிடிச்சார். உடனே உஷாரான ஊழல் பார்ட்டிகள், 'இவர் ஸ்டாலினுக்கு அனுசரணையான அதிகாரி'ன்னு அழகிரி தரப்பு ஆட்களிடம் சைஸா 'பிட்'டைப் போட்டுட்டாங்களாம். சிக்கல்ல மாட்டிக்கிட்ட அதிகாரி, இந்த அரசியலைப் பார்த்து நொந்துட்டாராம். 'இனியும் இங்கே இருந்தா பம்ப் அடிச்சிருவாங்க'ன்னு முடிவுக்கு வந்துட்டவர், 'என்னை வேற மாவட்டத்துக்கு மாத்திடுங்க'ன்னு மேலிடத்துக்கு மனு போட்டிருக்காராம்.''

''மதுரைக்காரங்களா கொக்கா..!'' சொல்லிச் சிரித்தார் மங்குனி.

''தேடித் தேடிப்போய் புகார் கொடுத்தாலும் தீர்வு கொடுக்காமல் அலையவிடுறவங்களுக்கு மத்தியில், சென்னை மேயர் மா.சுப்ரமணியமே நேரடியா ஒரு ஆளைத் தேடிப் போய் புகார் வாங்கிய கதை தெரியுமா உமக்கு?'' என்று ஆரம்பித்தார் மன்னர். ''சமீபத்தில், புரசைவாக்கம் குடியிருப்புக்குப் போனார் மேயர். அங்கே ஒரு ஃப்ளாட்டில் ஒரு பெரியவர் இருக்கார். அவர்கிட்ட, 'நான்தான் சென்னை மேயர். உங்களுக்கு மாநகராட்சி உதவி தேவைப்படுதுன்னு சொன்னாங்க. அதான் வந்தேன்' என மா.சு சொல்ல, மனம் நெகிழ்ந்த அந்தப் பெரியவர் ஒரு மனுவை மேயரிடம் கொடுத்தார். சென்னை அண்ணா சாலையை ஒட்டின ஓர் இடம் அவருக்குச் சொந்தமாம். கோர்ட் உத்தரவு கிடைச்சும், மாநகராட்சி அந்த இடத்தை பெரியவரிடம் ஒப்படைக்காமல் சாக்குப்போக்கு சொல்லி இழுத்தடிச்சதாம். அதைத்தான் அந்தப் பெரியவர் மனுவா எழுதி மேயரிடம் கொடுத்தாராம்.''

''இந்த விவகாரம் மேயருக்கு எப்படித் தெரிஞ்சது?'' -ஆர்வமாகக் கேட்டார் மங்குனி.

''அந்தப் பெரியவர் வேறு யாருமல்ல... ஒரு காலத்தில் வைர வியாபாரியா இருந்து மேயராப் பதவி வகிச்சத சிவசங்கர மேத்தா. தி.நகரில் ஒரு தெருவுக்கே அவர் பெயர் இருக்கு. பொதுநல ஆர்வலரா இருந்து, அதனாலேயே சொத்து சுகங்களை இழந்த சிவசங்கர மேத்தாவுக்கு எஞ்சி இருக்கும் ஒரே சொத்தும் பிரச்னையில் இருக்கு. இந்த சோகத்தை உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இரா.சனார்த்தனம் சமீபத்தில் மேயரிடம் சொல்ல... ஓடோடி வந்தாராம்!''

''முன்னாளைத் தேடிப்போன இந்நாள்... நல்ல விஷயம்தான்! சென்னை சோர்ஸிடம் இருந்து எனக்கும் ஒரு தகவல் வந்தது. ஆவடியை மாநகராட்சியாக்கும் கோப்பு விறுவிறுன்னு தயாரானது. ஆனா, இடையில் என்ன நடந்ததோ... அதில் வேகத் தடை! ஆவடி, மாநகராட்சியா மாறினால், தனக்கு நெருக்கமான ஆளுக்கு பவர் போயிடும்னு பயந்து, காங்கிரஸைச் சேர்ந்த சீனியர் புள்ளி ஒருத்தர்தான் முதல்வரிடம் இல்லாத பொல்லாத சேதிகளைப் பரப்பி, அந்த வேலைக்குத் தடை போடுறாராம். மாநகராட்சியா மாறினால் நிறைய வசதி வாய்ப்புகள் கிடைக்கும்னு ஏங்கும் ஆவடி மக்கள் விரைவிலேயே அந்த காங்கிரஸ் புள்ளியைக் கண்டிச்சு, போராட்டம் நடத்தத் தயாராகிட்டாங்க...'' - ஆவடி ஆதங்கத்தை மங்குனி சொல்லி முடிக்க,

''பரமசிவன் கழுத்து பாம்பு என்ன வேணும்னாலும் செய்யும்!'' கமென்ட் அடித்தபடியே கிளம்பினார் மன்னர்!