மூளும் யுத்தம்

தாய்ப் பாலா கள்?!

'கன்னித் தீவு' கதையாக நீண்டு கொண்டேயிருக்கும் கள் இயக்கப் போராட்டக் குளத்தில், இந்தமுறை 'கல்'லெறிந்து சலசலப்புக் கிளப்பியிருப்பவர் பனைத் தொழிலாளர் வாரியத்தலைவர் குமரி அனந்தன்!

கள் இறக்க தடை போட்டிருக்கும் தமிழக அரசுக்கு எதிராக மாநிலம் எங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது கள் இயக்கமும், சமத்துவ மக்கள் கட்சியும். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'கள் இறக்கவும் வேண்டாம். கள்ளால் இறக்கவும் வேண்டாம்!' என்று குமரி அனந்தன் கோபக் குரல் கொடுக்க... அக்னி உஷ்ணத்தில் தகித்துக் கிடக்கிறது எதிர்த்தரப்பு!

''ஜெயலலிதா, கருணாநிதி ரெண்டு பேருமேகஜானாவை நிரப்பப் பார்க்கும் சாராய வியாபாரிங்க. அதனாலதான், அரசாங்க மதுக் கடைகளைத் திறந்து வச்சுகிட்டு...

கள்ளுக்கு தடை போடுறாங்க. ஆனால், பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவா பேசவேண்டிய வாரியத் தலைவர் குமரி அனந்தனே இப்படி பேசுவது ரொம்ப அதிர்ச்சியான விஷயம்...'' என்று விரக்தியோடு பேச ஆரம்பித்தார் 'தமிழக கள் இயக்க' ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி.

''தமிழ்நாடு முழுக்க கடந்த ஆண்டு மட்டும் டாஸ் மாக்கோட வருமானம் 12 ஆயிரத்து 491 கோடி ரூபாய். பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவதற்காகத்தான் கள் இறக்க அனுமதி மறுக்கப்படுகிறது என்று சப்பைக் கட்டு கட்டும் அதே தமிழக அரசுதான், டாஸ்மாக் வியாபாரம் மூலம் இப்படியரு சாராய சாதனையையும் படைக்கிறது. மத்திய அரசேகூட தனது நிதி நிலை அறிக்கையில், கள் இறக்குவோர் நலன் பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. 'வாட்' வரி விதிப்பிலும் 'கள்'ளை உணவுப் பொருளாக ஏற்று வரிவிலக்கு அளித்திருக்கிறது. ஆனால், அதே கூட்டணியில் உள்ள நமது தமிழக அரசு தனது நிதி நிலை அறிக்கையில் கள் இறக்குவோர் நலனுக்காக ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை.

இந்திய அரசியல் சட்டத்தின் 47-வது பிரிவின்படி, கள் ஓர் உணவுப் பொருள்தான். இதுமட்டுமல்ல, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் 'புளித்த கள், புளிக்காத கள் இரண்டுமே உணவின் ஒரு பகுதிதான்' என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இதே கருத்தைத்தான் ஜனாதி பதி பிரதீபா பாட்டீலில் ஆரம்பித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் கேரளாவின் உதயபானு குழு வரை அனைவருமே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசும், குமரி அனந்தனும் கள் போதைப் பொருள் என்று வெட்டி நியாயம் பேசிக்கொண்டு இருப்பது பணம் சம்பாதிக்கவும், பதவியைத் தற்காத்துக் கொள் ளவும்தானே?

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு சவாலாகவே கேட்கிறேன். கள் போதைப் பொருள்தான் என்று எங்களுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தி நிரூபிக்கத் தயாரா?'' என்று சூடாகவே கேட்டு முடித்தார்.

தமிழகம் எங்கும் கள் இறக்க அனுமதி கோரி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியிருக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நம்மிடம், ''பனைத் தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்படும் என்று தேர்தல் சமயங்களில் வாக்குக் கொடுத்ததை வசதியாக மறந்துவிட்டார் கருணாநிதி. இதுவிஷயமாக அறிவிக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் கமிஷனின் அறிக்கையும் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. குடும்ப குலத் தொழில் வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்திவரும் எங்கள் கட்சியினரைப் பார்த்து 'யாரையும் சாகடிக்க நினைக்க வேண்டாம்' என்றெல்லாம் குமரி அனந்தன் கதறுவது யாரைத் திருப்திப்படுத்த?

கிராமங்களில் கக்குவான், இருமல் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பனங்கள், தென்னங் கள்ளைத்தான் மருந்தாகக் கொடுப்பார்கள். தாய்ப் பாலுக்கு ஈடான அந்தக் கள்ளை 'போதை' என்று சொல்வது வடிகட்டிய பொய்! தன் அவைக்கு வருகை தந்த அவ்வையின் களைப்பு நீங்க அதியமான் 'கள்' கொடுத்து வரவேற்றதாகத்தான் வரலாறே சொல்கிறது. இது இலக்கியச் செல்வருக்குத் தெரியாதா? தூய்மையான கள்ளைக் குடித்து இறந்துபோன யாராவது ஒருவரையாவது காட்டமுடியுமா உங்களால்?'' என்று சவால் விட்டார்.

நம் மூலமாக அனைத்துக் கேள்விகளையும் பொறுமையாகக் கேட்டுமுடித்த குமரி அனந்தன்,

''யாரையும் திருப்திப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. மதுவுக்கு எதிராகப் போராடி பலமுறை சிறை சென்றதோடு அப்போதெல்லாம் ஜாமீனில்கூட வெளிவர விரும்பாதவன் நான். வள்ளுவரே 'கள்ளுண்ணாமை' பற்றி தனி அதிகாரமே எழுதியிருக்கிறார்.

'டாஸ்மாக் நடத்துகிறார்களே... கள் மட்டும் விற்கக்கூடாதா?' என்று கேட்கிறார்கள். சுண்டு விரலில் காயம் இருந்தால் அதை சுகப்படுத்தணுமே தவிர, சுண்டு விரலில்தான் காயம் இருக்கிறதே பெருவிரலிலும் காயம் உண்டாக்கினால் என்ன தப்பு? என்று எதிர்க்கேள்வி கேட்பது சரியில்லை.

தேர்தல் வாக்குறுதியாக கலைஞர் என்ன சொன்னார் என்பது மட்டுமே முக்கியமில்லை. பூரண மதுவிலக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதைப் படிப்படியாக அமல்படுத்துவார் என்றும் நம்புகிறேன். தமிழக அரசும் தனது நிதிநிலை அறிக்கையில் பனைத் தொழிலாளர்களுக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. கள்ளை தாய்ப்பாலுக்கு இணையானது என்று சொல்வது பெரிய கொடுமை. இதற்கே இவர்கள்மீது வழக்குப் போடலாம்.

இந்திய அரசியல் சட்டம் 47-ஐ முழுவதுமாக படித்தறிந்தவரையில் கள் உணவுப்பொருள்தான் என்று எந்த இடத்திலும் சொல்லவே இல்லை. நமது ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று சொல்வதும் சுத்தமான பொய். நானும் இதுபற்றி விவாதிக்கத் தயாராகவே இருக்கிறேன். இதெல்லாம் உண்மைதான் என்று நிரூபிக்க அவர்கள் தயாரா?'' என்றார் கோபத்துடன்.

பல முனைகளில் இருந்தும் பறந்து வந்த சவால்களில் கிர்ர்ர்ர்ரடித்து நின்ற நமது கண்களில் பட்டது அந்த போராட்டப் பத்திரிகைச் செய்தி!

'தமிழ்ச் செம்மொழி மாநாட்டு வளாகத் திலேயே கள் விற்பனை செய்வோம்!'

தமிழுக்கு அமுதென்றுதானே பேர்?!

- த.கதிரவன்