Published:Updated:

`நகராட்சிக் குடிநீரில் கலந்த நச்சுக்கழிவு' - திருவாரூரில் 60 பேருக்கு நேர்ந்த சோகம்

திருவாரூர் மருத்துவமனை
திருவாரூர் மருத்துவமனை

திருவாரூர் நகராட்சி விநியோகிக்கும் குடிநீரில் அவ்வப்போது கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதுகுறித்து தாங்கள் ஏற்கெனவே பலமுறை புகார் தெரிவித்து வந்தனர்.

திருவாரூர் நகராட்சி விநியோகிக்கும் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், இதைக் குடித்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் கலந்த நீரால் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

Vikatan

நச்சுத்தன்மை கலந்த குடிநீரை அருந்தியதால்தான் இவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், கமலாம்பாள் நகர், அவ்வை நகர், துர்க்காலயா சாலை, வ.உ.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இவர்கள் உடனடியாகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இவர்களில் 8 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். திருவாரூர் நகராட்சி விநியோகிக்கும் குடிநீரில் அவ்வப்போது கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதுகுறித்து தாங்கள் ஏற்கெனவே பலமுறை புகார் தெரிவித்து வந்ததாகவும், தற்போது இதன் பாதிப்பு அதிகமானதால்தான், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட கடுமையானஉடல்நலக்குறை ஏற்பட்டதாக இப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

`பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்; விதிமீறிய அதிகாரிகள்?’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய சர்ச்சை

இனி வரும் காலங்களில் இதுபோன்ற அவலம் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு கண்டு, சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். இப்பிரச்னை பெரிதாக பூதாகரமெடுத்ததால், சுகாதாரத்துறை அதிகாரிகள், இப்பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ததோடு, இதை மேலும் பரிசோதிக்க, ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து வருகிறார்கள். சுகாதாரமான குடிநீரை வழங்கவது அரசின் கடமை. ஆனாலும், இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன. இனி இதுபோல் நிகழாதவாறு, தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு