Published:Updated:

அசாமில் துப்பாக்கிச்சூடு, குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்! - 14 பேர் பரிதாப பலி

கவுகாத்தி: அசாம் மாநிலம் கோக்ரஜார் நகரில் உள்ள மார்க்கெட்டுக்குள் புகுந்து பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வட கிழக்கு மாநிலமான அசாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அசாமில் துப்பாக்கிச்சூடு, குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்! - 14 பேர் பரிதாப பலி

இந்நிலையில், அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோக்ரஜார் நகரில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கோக்ரஜார் நகரில், பலஜான் தினியாலி பகுதியில் உள்ள பிரபல மார்க்கெட்டுக்குள் நேற்று திடீரென ஓர் ஆட்டோவில் நுழைந்த பயங்கரவாதிகள் ஐந்து பேர், அங்கு கூடி இருந்தவர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் போன்று உடைகளை அணிந்திருந்த பயங்கரவாதிகள், தங்களது முகங்களைத் துணியால் மூடி மறைத்திருந்துள்ளனர்.

பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள், இந்த திடீர் தாக்குதலால் அதிர்ந்துபோய் செய்வது அறியாமல் உயிர் பிழைக்க அங்கும் இங்குமாக ஓடி இருக்கிறார்கள். ஆனாலும், இந்த தாக்குதலில், அப்பாவி மக்கள் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் இருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால், அங்கிருந்த சில கடைகளும் தீப்பிடித்து எரிந்தது.

அசாமில் துப்பாக்கிச்சூடு, குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்! - 14 பேர் பரிதாப பலி

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் அறிந்து, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து பதிலடி கொடுத்துள்ளனர். இதில், ஒரு பயங்கரவாதி குண்டு பாய்ந்து இறந்துள்ளான். அவனது உடல் கிடந்த இடத்தில் இருந்து ஒரு ஏ.கே.–47 ரக துப்பாக்கி, ஒரு ஏ.கே.–56 ரக துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதற்கிடையே, மற்ற இரு பயங்கரவாதிகளும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருவதாக அசாம் மாநில டி.ஜி.பி. முகேஷ் சகாய் தெரிவித்துள்ளார்.

மேலும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (சோங்பிஜித்) என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அசாமில் துப்பாக்கிச்சூடு, குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்! - 14 பேர் பரிதாப பலி

இந்தத் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள அசாம் முதல்வர் சரபானந்தா சோனோவால், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்யுமாறு நிதி மற்றும் கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், எந்த பயங்கரவாத இயக்கத்தின் நிர்ப்பந்தத்துக்கும் அரசு அடிபணியாது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

மேலும், பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் சோனோவால் அறிவித்து உள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். இந்திய–பூடான் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு