அமெரிக்க அதிகார மையத்துக்கு மிகப் பெரிய எதிரி யார் என்று கேட்டால்... அது ஜூலியன் அசேஞ்ச்!

அமெரிக்காவின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றி வரும் விக்கிலீக்ஸ்இணைய தளத்தின்

. பிதாமகன். 'புலனாய்வுப் புலிகள்...’ என்று மார்தட்டிக்கொள்ளும் சர்வதேசப் பத்திரிகையாளர் கள், ஜூலியன் அசேஞ்சை ஆகாயம் மாதிரி அண்ணாந்துதான் பார்க்கிறார்கள்! பூமியின் வரம்பு களை வைத்துக்கொள்ளாமல் கண்டம், நாடு என்ற எந்த எல்லைகளுக்குள்ளும் சுருங்கிவிடாமல், பல நாடுகளைப்பற்றிய திடுக்கிடும் ரகசியங்களை தன் இணையதளத்தில் ஆதாரபூர்வமாக வெளியிட்டு வருகிறார் அசேஞ்ச்..
'கருத்துச் சுதந்திரத்தின் காவலன்!’ என்று தன்னைப் பிரகடனப்படுத்தும் அமெரிக்காவால்... சீனா மாதிரி 'எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தை வெளிப்படையாகத் தடை செய்து விட

முடியாது. ஆனாலும், அமெரிக்காவின் அதிகார மையத்தின் விருப்பப்படியே கடல் தாண்டியும் காரியங்கள் நடக்கின்றன. 'ஆணுறை இல்லாமல் என்னோடு உறவுகொண்டார்’ என்று

அசேஞ்ச் மீது இரண்டு பெண் கள் சுவீடன் நாட்டில் புகார் கொடுக்க... அதைவைத்து, சர்வதேச போலீஸார் அசேஞ்ச்சைக் கைது செய்து, ஜாமீனில்கூட வெளிவர முடியாத நிலையில் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

விக்கிலீக்ஸ் இணையதளம் இயங்க ஒத்துழைப்புக்கொடுத்த நிறுவனங்கள் எல்லாம் இப்போதோ ஜூலியன்

அசேஞ்ச்சை அம்போவென்று அந்தரத்தில் விட்டுவிட்டன. வாசகர்களிடம் இருந்து விக்கிலீக்ஸுக்கு வரும் நன்கொடைகளை வராமல் தடுக்கும் வண்ணமாக மாஸ்டர் கார்டு, விசா, 'பே பால்...’ போன்ற வாசல்கள் அடைக்கப்பட்டுவிட்டன. அமெரிக்காவின் அதிகார மையமோ, எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல பாசாங்கு செய்கிறது!

அமெரிக்காவின் பிடரியைப் பிடித்து உலுக்குவது மாதிரி அசேஞ்ச் வெளியிட்டுக்கொண்டு இருக்கும் ரகசியங்களில், இப்போது 'திகுதிகு’ என்று பற்றி எரிவது, 'ஈராக்கில் அமெரிக்கா செய்த அட்டூழியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு கறுப்பு வெள்ளை வீடியோ காட்சி’!

2007-ம் ஆண்டு ஜூலை மாதம், 17-ம் தேதி... ஈராக் மீது அமெரிக்கா உக்கிரமான தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருந்த காலக்கட்டம். பாக்தாத் நகரின் மீது பறக்கும் அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, அந்த நகரின் வீதிகளில் 10, 12 பேர் கும்பலாக இருப்பதைப் பார்க்கிறது. 'அவர்கள் எங்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்டுகிறார்கள்... அவர்களை சுடட்டுமா?’ என்று ஒயர்லெஸில் தங்கள் அதிகாரியிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு அவர் களை நோக்கி படபடவென்று சுடுகிறது அந்த 'அப்பாச்சி’ ஹெலிகாப்டர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தக் கூட்டத்தில் சிலர் சுருண்டு வீழ்கிறார்கள்... சிலர் சிதறி ஓடுகிறார்கள். என்றாலும் அமெரிக்க ராணுவத்தினர் கொலை வெறியோடுஅவர்களை நோக்கி வானத்தில் வட்டமிட்ட படியே சுற்றிச் சுற்றி சுடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் குண்டடிபட்டு தரையில் வீழ்ந்துவிட்டார்கள். மீண்டும் ஒரு முறை வட்டமிடுகிறது அப்பாச்சி. சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்ஸுக்கு புகைப்படம் எடுக்கும் நமீர் மற்றும் சயீத் ஆகிய பத்திரிகையாளர்களும் சுடப்பட்டு வீழ்ந்தவர்களில் அடக்கம்.

இதில், நமீர் சற்றே உறுதியானவர் என்பதாலோ என்னவோ... வீதியில் இருந்து தட்டுத் தடுமாறி எழுந்து பாதுகாப்பான ஓர் இடத்தை நோக்கி எழுந்து செல்ல முயற்சிக்கிறார். இதை ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும் ராணுவ அதிகாரிகள், 'நமீர் ஆயுதத்தை எடுக்கிறார்... அவரைச் சுடட்டுமா?’ என்று மறுமுனையில் இருக்கும் தங்கள் அதிகாரியிடம் அனுமதி கேட்கிறார்கள். இந்த உரையாடல் நடக்கும்போதே... அந்த வழியாக பள்ளிக் கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஒரு எஸ்.யூ.வி. கார் வருகிறது. குற்றுயிரும் கொலையுருமாக வீதியில் கிடக்கும் நமீர் மீது இரக்கப்பட்டு, காரில் இருந்து இறங்கிய இருவர் நமீரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல காருக்குள் ஏற்றுகிறார்கள். அந்த தருணத்தில், ஹெலிகாப்டரில் இருந்து பறந்து வரும் தோட்டாக்கள் அந்த காரை சல்லடையாகத் துளைக்கின்றன. கார் இனிமேல் நகராது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே துப்பாக்கி மழை நிற்கிறது. அப்போது அங்கே வரும் ஓர் அமெரிக்க டாங்கி, வீதிகளில் இறந்துகிடக்கும் சடலங்கள் மீது ஏறி அந்த காரை அடைகிறது. காருக்குள் காயப்பட்ட இரண்டு குழந்தைகள்... 'அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லட்டுமா?’ என்று அந்த அதிகாரிகள், கேட்க... ''யுத்த களத்துக்கு குழந்தைகளை அழைத்துவந்தது அவர்களின் தவறு! அடிபட்டுக்கிடக்கும் அவர்களை ஈராக் போலீஸாரிடம் ஒப்படைத்துவிடுங்கள்!'' என்று மறுமுனையில் உத்தரவிடுகிறார்கள்.

அமெரிக்க டாங்கி சடலங்கள் மீது ஏறி இறங்குவதை ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும் அமெரிக்க ராணுவத்தினர்... தங்கள் மகிழ்ச்சியை உரத்த குரல் எழுப்பி வெளிப்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த முறை அமெரிக்கா என்ன சால்ஜாப்பு சொன்னாலும்... உலகம் அதை ஏற்றுக்கொள்ளாது என்பது மட்டும் உறுதி!

எடுக்க எடுக்கக் குறையாத அளவுக்கு இப்படிப்பட்ட ஆவணங்கள் ஜூலியன் அசேஞ்சிடம் இருப்பதால்... 'எந்த நேரத்தில் அவர் என்ன ஆவணத்தை வெளியிடுவாரோ?’ என்று அமெரிக்காவைப் போலவே, உலகின் பல அதிகார மையங்களும் கவலைப்படுகின்றன.

மடியில் கனம் இருந்தால்... பயம் இருக்கத்தானே செய்யும்!