ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழகத்தில் சி.பி.ஐ. பின்தொடரும் மர்ம மனிதர்களைப் பற்றி கொஞ்சம் ஆழமாகத் தோண்டித் துருவியதில் கிடைத்த தகவல்கள் இவை!

பொருளாதார ஜாதகம்!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கை மாறிய தொகை, சென்னையில் இருந்து வான் மார்க்கம், கடல் மார்க்கம் ஆகிய இரண்டு வழிகளாகத்தான் வெளிநாடுகளுக்குப் போயிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம், தென் மாவட்டத்தின் கடற் கரையோர ஊரில் உள்ள இன்னொரு நிறுவனம்... இவை இரண்டும்தான் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு

. அதிகாரிகள் கருதுகிறார்கள். வெளிநாடு போன பணம், அங்கு உள்ள பிரபல நிறுவனங்கள் பெயரில் திரும்பவும் தமிழகம் வந்திருக்கிறது. அந்தப் பணத்தில் அசையா, அசையும் சொத்துகளாகவும், வங்கிகளில் முதலீடுகளாவும் பதுக்கி இருக்கிறார்கள். காலி இடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், மால்கள், பள்ளிகள், வீடுகள் என வாங்கிக் குவித்து இருக்கிறார்கள். இதை எல்லாம் ரெய்டு நடத்தி, அதன் பின்னணியில் இருப்பவர்களின் கடந்த கால - நிகழ் காலப் பொருளாதார ஜாதகங்களைச் சேகரித்து, கோர்ட்டில் ஒப்படைத்து, ஏலம் மூலம் இழந்த தொகையை மீண்டும் அரசுக்கு வரும்படியாகச் செய்தால்தான், ஊழல் நடந்ததை நிரூபிக்க முடியும். இல்லாவிட்டால், 'எதிர்க் கட்சியினரின் வாயை அடைக்க நடந்த கண் துடைப்பு நாடகம்' என்று விஷயம் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகவே திரும்பிவிடும். குற்றம்சாட்டப்படுகிறவர்கள், சட்டத்தில் உள்ள சந்துபொந்துகளில் புகுந்து வெளியே வந்து விடுவார்கள். இதற்கு எந்த வகையிலும் இடம் அளித்துவிடக் கூடாது என்பதில் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் உஷாராகக் காய் நகர்த்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள வி.வி.ஐ.பி-க்களின் பூர்வாங்கத்தை இந்த இரு துறையினரும் சேகரித்துக் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில், சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்துகிறார்கள். 'இங்கே அடித்தால், அங்கே வலிக்கும்' என்கிற ஃபார்முலாவைத்தான் மத்திய அரசு அதிகாரி கள் கையில் எடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் திரை மறைவில் இருந்துவந்த பவர்ஃபுல்லான புரோக்கர்கள் பலரின் பயோடேட்டாக்கள் விரைவில் அம்பலத் துக்கு வரும் எனத் தெரிகிறது. .
மிஸ்டர் குழல் எங்கே?

3ஜி அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரங்களில் இன்டர்நேஷனல் லெவலில் தொழிலதிபர்கள் மத்தியில் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் தான் இந்த மிஸ்டர் குழல்! பெரம்பலூர் தான் பூர்வீகம். கடந்த ஐந்து வருடங்களில் இவரின் வளர்ச்சி எங்கோ போய்விட்டது! சீனா, லண்டனுக்கு ரெகுலராகப் போய் வரும் பிசினஸ் பிரமுகர் என்கிற அந்தஸ்தைப் பெற்றவர். இந்தியாவில் உள்ள எந்தவொரு விமான நிலையத்திலும் கெடுபிடிகள் இல்லாமல் நுழைந்து வரும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவர். கடந்த ஒன்றரை மாதங்களாக இவர் வெளிநாடு விசிட் போயிருந்தாராம். இவரைப்பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தபோது, உதாரணமாக ஒரு சம்பவத்தை சிலர் சொன்னார்களாம். அண்மைக் காலத்தில் வந்த இடைத்தேர்தல் நேரத்தில் சென்னையில் இருந்து தனியார் விமானம் ஒன்றில், சில கோடிகளை எடுத்துச் சென்று விநியோகித்தாராம்!

பலே பனி மனிதர்..!

இவரும் சென்னை வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆந்திரா, உத்தரகண்ட், பீகார் மாநில அரசுகளின் பவர் சென்டர்களில் முக்கிய புரோக்க ராக வலம் வருகிறவர். நீதிபதிகள் சிலருக்கு மிகவும் அறிமுகமானவர். 'இப்போதுதான் 2ஜி கான்ட்ராக்ட்டில் சில விஷயங்களை முடித்தேன். பொருளாதார மண்டலங்கள் மூன்று வருவதில் எனக்கு நிறையப் பங்கு உண்டு' என்றெல்லாம் அடிக்கடி இவர் சொல்ல... ஆரம்பத்தில் நண்பர்கள், இவர் பீலா விடுவதாகத்தான் நினைத்தார்களாம். பிறகுதான், இவரின் சந்தடியில்லாத செல்வாக்கு பற்றி தெரியவந்து, வாய் பிளந்தார்கள்!

சி.பி.ஐ. அதிகாரிகள் இவரை நோக்கிச் செல்லக் காரணம், 'செல்போன் டவர் அனுமதி விவகாரத்தில், இவரது தலையீடு இருந்ததா?’ என்று அறியத்தான்! முன்பு எல்லாம் செல்போன் டவர்கள் ஆங்காங்கே தனித்தனியாக இடம் பிடித்து, அமைக்கப்பட்டு வந்தன. துபாயைச் சேர்ந்த கம்பெனி ஒன்று இந்தியாவில் தற்போது காலூன்ற வந்திருக்கிறது. இந்த கம்பெனி சார்பில் இடம் வாங்குவார்கள், செல்போன் டவர்களையும் அமைப்பார்கள். அந்த டவரில் செல்போன் கம்பெனிகள் வாடகைக்குத் தங்களது கருவிகளைப் பொருத்த முடியும். அப்படி பக்கா படா பிசினஸ் பிளானுடன் வரும் வெளிநாட்டு கம்பெனிக்கு இங்கே அளவுக்கு மீறி சலுகை காட்டப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது.

பனி மனிதருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் இரண்டு பி.ஆர்.ஓ-க்கள். சென்னை, அண்ணாசாலை அலுவலகத்தில் இருந்த ஒருவரை அந்த நிர்வாகம் வெளியே அனுப்பிவிட்டது. இன்னொருவர், மருத்துவம் தொடர் பானவர். இந்த இருவரும் கடந்த காலத்தில் வெளிநாடுகளுக்குப் போய் வந்த வரலாறுகளையும் ஒன்றுவிடாமல் மத்திய அதிகாரிகள் புரட்டி வருகிறார்கள்.

மங்களூரார்!

சென்னையில் ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதியுடன் ஜோராக ஹோட்டல் வரப்போகிறது. 'இடையில் வளர்ச்சியில்லாமல் நின்ற ஒரு கட்டடம் எப்படித் திடீரெனக் கிடுகிடுவென வளர்ந்து வருகிறது என்பதன் பின்னணியைத் துருவி விசாரிக்கும்படி சி.பி.ஐ-க்கு நிறைய போன்கள், மொட்டை பெட்டி ஷன்கள் பறந்தன. அதை சீரியஸாக விசாரிக்க ஆரம்பித்தபோதுதான், இந்த மங்களூரார் பற்றி தெரியவந்தது. மங்களூரை பூர்வீகமாகக்கொண்ட இவர், இரண்டெழுத்துப் பெயரில் கார்மென்ட்ஸ் பிசினஸ் துவக்கினார். அதன் பிறகு, 10 வருடங்கள் முன்பு துபாய்க்குப் போனார். நிழல் உலகத் தலைவர் ஒருவர் உள்ளிட்ட பலரின் ஆசிகளுடன் ஹோட்டல் பிசினஸில் உச்சத்துக்கே போனார். 19 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் மங்களூராருக்கும் தொடர்பு உண்டு. மும்பையில் மூன்று, பெங்களூரு, திருப்பதியில் தலா இரண்டு ஹோட்டல்களும் இவரின் பெயர் சொல்கின்றன.

இந்தியாவில் உள்ள வி.வி.ஐ.பி-க்கள் சிலர் தங்களது முதலீடுகளை வெளிநாட்டில் இருக்கும் இவரது கம்பெனி பேனரின் மூலமாக, மீண்டும் இந்தியாவில் உள்ள ஹோட்டல், டூரிஸ்ட் பிசினஸ்களில் போடுவது தொடர்பாக சில தகவல்களை சி.பி.ஐ-க்கு அனுப்பி னார்கள் சென்னைத் தொழிலதிபர்கள். அந்த வகையில், 'ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய சிலர் இந்த மங்களூராருடன் ரகசியக் கூட்டணி போட்டு பிரமாண்ட ஹோட்டல் கட்டுகிறார்களோ?’ என்கிற சந்தேகம் சி.பி.ஐ-க்கு வந்திருக்கிறது. மங்களூ ரார், பெரும்பாலும் துபாயில்தான் இருப்பார். எப்போதாவது இந்தியா வந்தால், பலத்த செக்யூரிட்டி ஏற்பாடுகளுடன்தான் வருவாராம். பிரபல ஆன்மிகத் தலைவர் கொஞ்ச காலம் முன்பு சென்னை வந்தததற்கு, இந்த ஹோட்டல் பிசினஸ் ஒப்பந்தம்தான் காரணம் என்று இப்போது கிகிசுக்கிறார்கள்!

பைஜாமா - பிரான்ஸ் பார்ட்டிகள்!

வெளிநாடு ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட காபரே கிளப்புகள். அங்கு உள்ள டாப் ஸ்டார் ஹோட்டல்களில் காபரே கிளப் நடத்துகிறார் பிசினஸ் புள்ளி ஒருவர். அதற்காகப் பல அழகிகள் இங்கு இருந்து அங்கு செல்வது சகஜம். அதனால், இரண்டு நாட்டு ஆட்சி மேலிடத்துடனும் தொடர்பு வைத்திருப்பவர் இவர். பிசினஸுக்கு இன்னொருவரும் கூட்டாளி. இவர்களைத்தான் 'பைஜாமா - பிரான்ஸ் பார்ட்டிகள்’ என்று தொழிலதிபர்கள் வட்டாரத்தில் அழைக்கிறார்கள். வெளிநாடு ஒன்றில் அதிகாரத்தில் இருக்கும் பிரமுகரும் இவர்களின் ரகசியத் தோழர். இவர்கள் கூட்டணிவைத்துச் செயல்படுவார்கள்.

அண்மைக் காலத்தில் சென்னையில் எந்த வங்கியிலும் இருந்து மிகப் பெரிய தொகை எடுக்கப்பட்டதா என சி.பி.ஐ-யினர் விசாரித் தனர். அப்போது அவர்களுக்கு, நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் இந்த பைஜாமா - பிரான்ஸ் பார்ட்டிகள் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்ததாம். மூன்று கறுப்பு நிற 'அடேங்கப்பா’ விலைகொண்ட கார்களை வாங்கப் பணம் எடுத்தனராம். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் குடைந்ததோடு, இவர்கள் அடிக்கடி எந்தெந்த நாடுகளுக்குச் சென்றனர் என்றும் பழசை எல்லாம் புரட்டிப் பார்த்தனர். கூடவே, அடிக்கடி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குச் சென்ற பின்னணியையும் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் 'படம் எடுக்கிறேன்’ என்று டான்ஸ் குரூப் ஒன்று வெளிநாடு சென்றதாம். அவர்களை அதிகாரிகள் விசாரித்தபோது, சிலர் இந்தியாவுக்குத் திரும்பினார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாம்!

எப்படிப் பறந்தார்கள்?

தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், டூரிஸ்ட் என்கிற பெயரிலும், இவர்களின் பினாமிகள் தொழில் முறையிலும் அடிக்கடி குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்துள்ளனர். அதில்

சந்தேகப்படும்படியான பினாமிகளின் பெயர்களை லிஸ்ட் எடுத்து, இவர்கள் எப்படி வெளிநாடு போனார்கள் என்று விசாரித்த அதிகாரிகளுக்குப் பெரிய அதிர்ச்சி. அவர்களில் பெரும்பாலானவர்களுமே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் உதவியுடன்தான் வெளிநாடு சென்றனராம். சில ஆண்டுகள் முன்பு வரை படுநஷ்டத்தில் இயங்கிய அந்த நிறுவனம், தற்போது ஏக லாபத்துடன் வெற்றி நடைபோடுகிறதாம். நிறுவன மேனேஜரின் பொருளா தார வளர்ச்சியும் உச்சம் தொடுகிறதாம்.

தென் இந்தியாவின் பிரபல கடற்கரை ஊரில் உள்ள இன்னொரு நிறுவனத்தின் மூலம் கடல் மார்க்கமாக ஹவாலா முறையில் பணம் வெளிநாடு சென்றிருக்கலாம் என்பதும் சி.பி.ஐ-யின் சந்தேகம். சட்ட விரோதமான முறையில் கடத்தல் பொருட்கள், ரேஷன் அரிசிக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் என்றெல்லாம் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. கப்பல் பிஸினசில் பிரபல நிறுவனம் அது.

தமிழக அரசியல் தலைவர்கள் சமீப காலமாக அடிக்கடி விசிட் அடிக்கும் இரண்டெழுத்துத் தீவு ஒன்றுக்கு, அந்த நிறுவனம் தொடர்புடைய கப்பல், சரக்குப் போக்குவரத்துகளை ஏற்கெனவே நடத்திவருகிறதாம். பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த நிறுவனத்தை அடிக்கடி ரெய்டு நடத்திய நேர்மையான மத்திய அரசு அதிகாரி ஒருவரை, தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றினார்களாம் இவர்கள்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப் பட்ட ஒரு சில பவர் புரோக்கர் களைத்தான் இதுவரை சி.பி.ஐ. கண்டு பிடித்திருக்கிறது. இவர்களையும் எப்படி சிக்கவைப்பார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்!