புத்தூர் வேட்டையில் துப்பாக்கிக் குண்டு துளைக்கப்பட்ட பன்னா இஸ்மாயில் இப்போது, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். அந்த மருத்துவமனை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இரண்டாவது டவரில் 213-வது வார்டில் இருக்கிறார் பன்னா இஸ்மாயில். அவரைச் சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை. மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் பன்னா இஸ்மாயிலின் மனைவி ஷமீம் பானுவைக் கூட அனுமதிக்க மறுத்துவிட்டது போலீஸ். நீண்ட முயற்சிக்குப் பிறகு, ஷமீம் பானுவிடம் பேசினோம்.

''எங்களுக்கு கல்யாணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இருவருமே 10-ம் வகுப்பு வரை படித்துள்ளோம். வீடு வாடகைக்குப் பிடித்து கொடுப்பது; நிலம் வாங்கி விற்கிறதுன்னு தொழில் செஞ்சுட்டு வந்தோம். அந்த வருமானத்தில்தான் குடும்பம் ஓடிட்டு இருந் துச்சு. குடும்பத்தை ரொம்பவே அக்கறையோடு கவனிச்சுக்குவாரு. ஒரு கொலை வழக்கில் கைதாகி விடுதலை ஆன பிறகு, எந்தப் பிரச்னை என்றாலும் அவர் மீதும் சேர்த்து வழக்குப் போடுவது போலீ ஸுக்கு வாடிக்கையாகி விட்டது. விசாரணை என்று அடிக்கடி வீட்டுக்கே வந்து தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சாங்க.

ஆறு மாசத்துக்கு முன்னால, விசாரிப்பதற்காக போலீஸார் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் இருந்த அவரை தரதரவென இழுத்துச் சென்றனர். அடித்து உதைத்து காலை உடைத்து அனுப்பினர். 'இனி நாம இங்கிருந்தால் என்னை மட்டுமல்ல உன்னையும் நிம்மதியாக வாழ விடமாட்டாங்க’ என்று சொல் லிட்டு பிழைப்புக்காக வெளியூர் போனாரு. ஆனாலும் போலீஸ் அவரை விடவில்லை. எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அதற்கும் இவர் மீதுதான் பழி விழுந்துகொண்டே இருந்தது. அதனால்தான் போலீஸுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலை வந்துச்சு. ஒருகட்டத்துல வீட்டுக்கு பணம் அனுப்புவதைக்கூட நிறுத்திட்டாரு. அவரையும் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை உருவானது.

என்னோட அப்பாவும் அம்மாவும்தான் எங்களைப் பார்த்துக்குறாங்க. புத்தூரில் அவரைப் போலீஸ் பிடிச்சுட்டாங்க... குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில இருக்கிறாருன்னு தெரிஞ்சு அவரைப் பார்க்க ஓடிவந்தோம். எங்க ஆறு வயசுப் பையன் அகமது யாசின், அப்பாவை பார்க்கணும்னு அழறான். எப்படியாவது அவரோட முகத்தைப் பார்த்துடணும்னுதான் வந்தோம். ஆனா, போலீஸ்காரங்க விட மாட்டேங்கிறாங்க. அவரு உயிரோட இருக்காரா... இல்லை போலீஸ் டிராமா பண்றாங்களானு தெரியல. போலீஸ் டார்ச்சரால் எங்க குடும்பமே சீரழிஞ்சு போயிருச்சுங்க...''.. முகத் தைப் பொத்திக்கொண்டு அழுகிறார்.

சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந் தவர், ''உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதாக அரசு தரப்புல சொல்றாங்க. இந்தச் சூழ்நிலையில் அவரைப் பார்க்கும் உரிமைகூட எனக்கு இல்லையா? அவர் மீது குற்றம்தான் சாட்டப்பட்டுள்ளதே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை. புத்தூரில் அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து எந்த ஆயுதத்தையும் போலீஸ் கைப்பற்றவில்லை. அந்தப் பகுதியில் எல்லோருடனும் நட்புடன்தான் இருந்து வந்தி ருக்கிறார். அப்படிப்பட்டவர் மீது போலீஸ் வீண் பழி போடுகிறது.

வேலூர் வெள்ளையப்பன் கொலை, சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை என்று அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை போலீஸ் சொல்கிறது. ஆனால், அவருக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதைவிட்டு என் கணவரைப் போல அப் பாவிகளைப் பிடித்து தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?'' என்று கண்கள் கலங்க கேட்கிறார்.

அருகிலேயே இருந்த ஷமீம் பானுவின் அப்பா கவுஸ் மைதீன், ''என் மருமகன் என்பதற்காக நான் சொல்லவில்லை... உண்மையிலேயே அவர் நல்ல மனிதர். அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவரை போலீஸ் டார்ச்சர்தான் ஊரைவிட்டு விரட்டியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக தேர்தல் வேலைகள் செய்தார். எங்க பகுதியில 500-க்கும் மேற்பட்ட ஓட்டுக்களை அ.தி.மு.க-வுக்கு வாங்கிக் கொடுத்தார். அப்படிப்பட்டவரை இந்த அரசு, தீவிரவாதி என்று முத்திரை குத்தி கைது செய்திருக்கிறது. அப்பாவிகளைக் கைது செய்தவர்களுக்கு விருதும், பணமும் கொடுக் கிறார்கள். இதை எங்கே போய் சொல்வது?'' என்று வெடித்தார்.

பன்னா இஸ்மாயில் நிரபராதியா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: சு.குமரேசன்