தமிழ் சினிமாவையும் தொப்புளையும் பிரிக்க முடியாது. நடிகை நஸ்ரியா கிளப்பிய தொப்புள் பிரச்னை அதில் வேறுரகம். இதுவும் விளம்பரத் தொப்புள் என்பதுதான் வேத னையான வேடிக்கை!

'நேரம்’, 'ராஜா ராணி’ என்று நடிகை நஸ்ரியா நடித்து வெளிவந்திருக்கும் படங்கள் இரண்டே இரண்டுதான். இருப்பினும், தனது துறுதுறு நடிப் பின் மூலம் தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்து விட்டார். இவர் நடித்து வெளிவரும் மூன்றாவது திரைப்படம் 'நய்யாண்டி’. இந்தப் படத்தை மையமாக வைத்தே கிளம் பியது தொப்புள் பிரச்னை.

''என்னைப்போல வேறு பெண்ணை நடிக்க வைத்து, 'நய்யாண்டி’ திரைப்படத்தில் தொப்புள் தெரியும்படி காட்சி அமைத்து இருக்கிறார் இயக்குநர் சற்குணம்'' என்று நடிகர் சங்கத்தில் நஸ்ரியா புகார் கொடுக்க... பிரச்னை ஆரம்பம் . யு-டியூப் மூலம் இவரின் தொப்புள் காட்சியைக் கண்டுரசித்த ரசிக சிகாமணிகளும், 'நஸ் ரியாவின் தொப்புளுக்கே டூப்பா?’ என்று இணையப் பெருவெளியில் பொங்கித்

தீர்த்துவிட்டனர். கூடவே, 'இது, படத்தை பப்ளிசிட்டி செய்வதற்கான ஸ்டன்ட்’ என்ற விமர்சனங்களும் கிளம்பின.

இந்தநிலையில், 'இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வருகிறார் நஸ்ரியா’ என்று கடந்த 8-ம் தேதி தகவல் வெளியாக, கமிஷனர் அலுவலகம் முன் குவிந்தது மீடியா. கமிஷனரைச் சந்தித்து புகார் கொடுத்த நஸ்ரியா, காத்திருந்த மீடியாக்களைக் கண்டுகொள்ளாமல் புறப்பட்டார். பிறகு என்ன நினைத்தாரோ... அன்றுஇரவே அனைத்து ஊடகங்களுக்கும் கமிஷனரிடம் கொடுத்த புகார் விவரத்தை மெயில் மூலம் அனுப்பி வைத்தார். அதில், ''நான் பாரம்பரியமான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த கேரளப்பெண். இப்போது, தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் கண்ணியமான ரோல்களில் மட்டும்தான் நடித்து வருகிறேன். 'நய்யாண்டி’ படத்தில் நான் நடிக்க மறுத்த காட்சியை, வேறு பெண்ணை நடிக்கவைத்து படமாக்கி இருக்கிறார்கள். இதை நான் இயக்குநரிடம் கேட்டேன். அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. படம் 11-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதனால், அந்தக் காட்சியை படத் தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து, இயக்குநர் சற்குணத்திடம் கேட்டோம். ''நஸ்ரியா சொல்வது ஒரு பாடல் காட்சி. 'இனிக்க இனிக்க’ என்ற அந்தப் பாடல் காட்சியில் தான் நடிக்கவில்லை என்று மறுக்க முடியுமா? காட்சிகளை எடிட் செய்யும்போது, ஒரேஒரு காட்சியில் க்ளோஸ்-அப் ஷாட் தேவைப்பட்டது. நஸ்ரியாவிடம் கேட்டேன். 'கேரளாவில் இருப்பதால் வர முடியாது. வேறு பெண்ணை வைத்து அந்தக் காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதனால்தான் எடுத் தோம். படத்தில் டூப் போட்டு வேறுபெண்ணை நடிக்க வைத்தது அந்த ஒரே காட்சிதான். அதையும் நீக்க தயாராக இருக்கிறோம். இந்தப் படத்தை இன்னும் அவர் பார்க்கவே இல்லை. அப்படி இருக்க இப்படி புகார் சொல்வது சரியா?'' என்று கேட்டார்.

''இதெல்லாம் படத்துக்கான பப்ளிசிட்டிதானே?'' என்று கேட்டோம். ''படவிளம்பரத்துக்காக நாங்கள் இப்படி செய்கிறோம் என்பது தவறு. தனுஷ் போன்ற பெரிய நடிகர்கள் இருக்கும்போது, எங்களுக்கு இந்த மாதிரியான பப்ளிசிட்டிக்கு அவசியமே இல்லை'' என்று படபடத்தார்.

அடுத்தநாளே இருதரப்பும் சமாதானம் அடைந்து விட்டனர் என்ற தகவல் வெளியானது. 9-ம் தேதி, பத்திரிகையாளர்களை மீண்டும் சந்தித்தார் நஸ்ரியா. ''யு-டியூப்பில் 'நய்யாண்டி’ பட ட்ரெய்லரைப் பார்த்தேன். அதில் ஒரு 'டூப்’ காட்சி இருந்தது. அதில் நான் நடிக்கவில்லை. என் அனுமதியின்றி எடுக்கப்பட்டு இருந்தது. இது என்னை ஏமாற் றுவதுபோல் இருந்தது. அதனால்தான், நான் போலீஸில் புகார் கொடுத்தேன். இப்போது அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டனர். நானும் படம் பார்த்தேன். அதில் 'டூப்’ காட்சிகள் இல்லை. எனக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சரியான தொடர்பு இல்லாததால்தான், பிரச்னை இவ்வளவு பெரிதாகி விட்டது'' என்றார் கூலாக.

ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நடிகைக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது என்று சொல்வதே நம்பும்படியாக இல்லை. ஆகமொத்தம், மீடியாவை வைத்து நய்யாண்டி செய்துவிட்டனர் 'நய்யாண்டி’ படக்குழுவினர்.

இந்த பப்ளிகுட்டி தேவையா பாஸ்?

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படம்: பா.கார்த்திக்