உண்மைக் காதலுக்கு எதையும் கொடுக்க மட்டும்தான் தெரியும் என்பதாலோ என்னவோ தன் உயிரையும் கொடுத்திருக்கிறார் மனோரஞ்சிதம்!

திண்டிவனம் அருகே உள்ள வெண்மணியாத் தூரை சேர்ந்த மனோரஞ்சிதத்துக்கும், பாலசந்திரமூர்த்திக்கும் எட்டு வருடங்களாக காதல். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு இல்லை. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனோரஞ்சிதம், தன் காதலன் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்காக தோல் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று அந்த வருமானத்தை பாலசந்திரமூர்த்திக்குக் கொடுத்து அவரை எம்.டெக் வரை படிக்க உதவியிருக்கிறார். அதுதான் பிரச்னைக்கே காரணம்.

'படிச்ச நான் எங்கே... படிக்காத நீ எங்கே.. உன்னை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?’ என்று சினிமா பாணியில் பாலசந்திரமூர்த்தி பேசியதுடன், வேறு பெண்ணை திருமணம் செய்யவும் ஏற்பாடுகளை செய்திருக்கிறார். எவ்வளவோ போராடிப் பார்த்தும் பலன் இல்லாததால், இறுதியில் ரயில் முன்பு பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார் மனோரஞ்சிதம்.

மனோரஞ்சிதம் வீட்டுக்குச் சென்று அவரது அம்மா ஆண்டாயிக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். ''மூணு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் காதலிக்கறதா வந்து நின்னாங்க. ஒருவகையில அந்தப் பையன் எங்களுக்குச் சொந்தம் ஆகுது. அதனால ரெண்டு வீட்டுத் தரப்புலேயும் கல்யாணத்துக்கு ஒப்புகிட்டோம். எம் புள்ளைதான் அந்தப் பையன் நிறைய படிக்கணும்... படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா. அவளுக்கு தோல் கம்பெனியில 8,000 சம்பளம். அதுல 5,000-த்தை மாசா மாசம் அந்தப் பையனுக்கு கொடுத்துட்டு மீதியைத்தான் எங்ககிட்ட கொடுப்பா.

ஒருநாள் திடீர்னு வண்டிக்கு டியூ கட்டுறதுக்கு பணம் இல்லைன்னு அந்தப் பையன் கேட்டான்னு கல்யாணத்துக்கு நாங்க வெச்சிருந்த 10 பவுன் நகையை எடுத்து அவன்கிட்ட கொடுத்துட்டா. நாங்க அவளைத் திட்டினோம். 'எம் புருஷனுக்கு நான் கொடுக்குறேன். உங்களுக்கு என்ன?’ன்னு எங்ககிட்ட கோபிச்சுகிட்டா.

படிப்பு முடிஞ்சதும், சென்னைக்கு வேலை தேடிப் போறதாகச் சொல்லி என் பொண்ணையும் கூப்பிட்டு இருக்கான். இவளும் சென்னையில இருக்கிற அவ அக்கா வீட்டுல போய் தங்கியிருந்தா. அந்த சமயத்துலதான் அவன், இங்கே வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணத் தயாராகிட்டான். என் பொண்ணுக்குத் தகவல் சொல்லி வரச் சொன்னோம். நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். போலீஸ் விசாரிச்சதும், என் பொண்ணை யாருன்னே தெரியாதுன்னு பொய் சொன்னான். என் பொண்ணு அவன் கால்ல விழுந்து கதறினா. 'உன்னாலதானே மூணு தடவை கர்ப்பமானேன். நீதானே என்னை வந்தவாசிக்கு கூட்டிட்டுப்போய் கலைக்க வெச்ச...’னு கதறினா. ஆனா, அந்தப் பையன் அதைக் கண்டுக்கவே இல்லை. நாளைக்குக் காலையில வாங்கன்னு சொல்லி போலீஸ்காரங்க அனுப்பினாங்க.

போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வெளியில வந்ததும் அந்தப் பையனுக்குப் போன் பண்ணினா. 'நீ இல்லன்னா கண்டிப்பா செத்துடுவேன்டா...’ன்னு கத்திகிட்டே ஸ்டேஷனுக்கு பின் பக்கத்துல இருக்கிற தண்டவாளத்துக்கு வேகமா ஓடினா. நாங்களும் கத்திகிட்டே பின்னாடியே ஓடினோம். அந்த நேரத்துல வந்த ரயில்ல பாய்ஞ்சிட்டா பாவி மக... கண்ணை மூடித் தொறக்குறதுக்குள்ள செதஞ்சிப்போயிட்டாங்க...'' பேச முடியாமல் பெருங்குரலெடுத்து அழுகிறார்.

பாலசந்திரமூர்த்தியை உடனடியாகப் போலீஸ் கைதுசெய்துவிட்டது. விசாரணையில், ''நானும் மனோவும் காதலிச்சது உண்மைதான். நான் படிக்கிறதுக்கு பணம் கொடுத்ததும் மனோதான். நான் எம்.டெக் வரைக்கும் படிச்சதால வசதியான இடத்துல கல்யாணம் பண்ணலாம்னு எங்க வீட்டுல சொன்னாங்க. நானும் ஒப்புகிட்டேன். மனோ இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு நான் நினைக்கலைங்க!'' என்று கதறியிருக்கிறார்.

வழக்கை விசாரிக்கும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ''வந்தவாசியில் கருகலைப்பு நடந்ததற்கான ஆதாரங்களை எடுத்து வரச் சொன்னோம். அதற்குள் அந்தப் பெண் இப்படி விபரீத முடிவை எடுத்துவிட்டாள்'' என்று வருத்தப்பட்டனர்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் காதல் என்பது ஒன்றுதானே! இது ஏன் பாலசந்திரமூர்த்திக்குப் புரியாமல் போனது? அந்த இளைஞர் இப்போது தன் தவற்றை உணரலாம். ஆனால், அந்தப் பெண் உயிர் திரும்பக் கிடைக்குமா?

-ஆ.நந்தகுமார், படங்கள்: தே.சிலம்பரசன்