தமிழகக் காவல் துறை அதிகாரிகளை சி.பி.ஐ போலீஸார் கைது செய்திருப்பதுதான் இப்போதைய திருச்சி அதிர்ச்சி!

சின்ன ஃப்ளாஷ்பேக்...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீமான், ரைஸ் மில் முதலாளி. இவரது மில்லில், அந்தூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மிஷின் ஆபரேட்டராக வேலைசெய்து வந்தார். மோகனுக்கும், சீமான் மகள் செல்வராணிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. மோகன்ராஜும் செல்வராணியும் கடந்த 1994-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தலைமறைவாகிவிட்டனர். பிறகு ஓடிப்போன செல்வராணியைக்

கண்டுப்பிடித்துத் தருமாறு சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேப்பியஸ் கார்ப்பஸ் மனு செய்தார். இந்த வழக்குக்காக விசாரிக்கப்பட்ட வேப்பூர் காலனித் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் பாண்டியனின் உடல், வேப்பூரை அடுத்துள்ள கிழுமத்தூர் அருகேயுள்ள சின்னாற்றங்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த விசாரணைக்காக ஆஜரான காவல் துறை அதிகாரிகள் காந்தியையும் ரவியையும் சி.பி.ஐ போலீஸார் திங்கட்கிழமை சென்னையில் கைது செய்து, திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாலசந்திரன், காந்தியையும், ரவியையும் ஜூன் 9-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பாண்டியனின் மனைவி அஞ்சலத்தை அவரது வீட்டில் சந்தித்தோம்.

''சீமானோட பொண்ணு ராணியும், அவங்க ரைஸ்மில்லில் வேலை செய்த பையனும் ஓடிப்போயிட்டாங்க.

இது நடந்து மூன்று மாதத்துக்குப் பிறகு, ஓடிப்போனவங்களை அவரு அடைக்கலம் கொடுத்து வெச்சிருந்ததா, சென்னையில் வேலை செய்த அவரை விசாரணைக்கு அழைச்சிக்கிட்டுவந்து, அடிச்சி சித்ரவதைப் பண்ணி கொலை செஞ்சுட்டாங்க...'' தொடர்ந்து சொல்ல முடியாமல் வார்த்தைகள் தடுமாற...

தொடர்ந்தார் அவரது அப்பா கருப்பன், ''அந்த வருஷம் ஆகஸ்ட் 3-ம் தேதி ராத்திரி

என்னை, சீமான் வந்து கூட்டிட்டுப் போனார். இன்ஸ்பெக்டர் காந்தி அவரோட ஜீப்புல உட்கார்ந்திருந்தார். அப்போ காந்தி, 'ஓடிப்போன சீமானோட பொண்ணையும், அந்த பையனையும் பாண்டியன்தான் எங்கயோ தங்க வைச்சிருக்கான்னு தகவல் கிடைத்தது. அதனால் சென்னைக்குப் போய் பாண்டியனை விசாரணைக்காக அழைச்சிக்கிட்டு வந்தோம். இங்க வந்ததும் பயந்து ஓடிப்போயிட்டான்னு சொன்னார். மறுநாள், வேப்பமரத்தில பாண்டியன் தூக்குல தொங்குறதா சொன்னங்க. அப்ப, உடம்புல காயங்கள் இருந்தது'' என்றார்.

பாண்டியனின் மைத்துனர் ராமலிங்கம், ''எங்களுக்காக பல அமைப்புகள் போராட்டம் நடத்தினாங்க. பிறகு, அக்காவை சென்னையில் இருக்கும் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ்கிட்ட அழைச்சிக்கிட்டு போய் உதவி கேட்டோம்'' என்றார்.

காதலர்களான செல்வராணி, மோகன்ராஜை தேடி வேப்பூரை அடுத்துள்ள அந்தூர் கிராமத்துக்குச் சென்றோம். மோகன்ராஜ் நம்மிடம், ''ராணியின் அப்பாவுக்குப் பயந்து வீட்டைவிட்டு வெளியேறி நாங்கள்

தஞ்சாவூருக்கு சென்று ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஊரை மாற்றிக்கொண்டு வாழ்ந்தோம். பாண்டியனை, நான் பார்த்ததுகூட இல்லைங்க'' என்றார்.

வழக்கை நடத்திய டாக்டர் வி.சுரேஷ், ''இந்தப் பிரச்னை எங்களிடம் வந்தபிறகு, விசாரணை என்ற பெயரில் பாண்டியனை எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்களோ, அங்கெல்லாம் நாங்களும் சென்று விசாரணை நடத்தினோம். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகுதான் அஞ்சலத்துக்கு நீதி கிடைத்துள்ளது'' என்றார்.

அப்பாவிகளுக்கு நீதிமன்றமே துணை!

- சி.ஆனந்தகுமார்

படம்: என்.ஜி.மணிகண்டன்