Published:Updated:

அசாமில் கலவர பலி 73 ஆக உயர்வு!

விகடன் விமர்சனக்குழு
அசாமில் கலவர பலி 73 ஆக உயர்வு!
அசாமில் கலவர பலி 73 ஆக உயர்வு!
அசாமில் கலவர பலி 73 ஆக உயர்வு!

கவுகாத்தி: கடந்த 10 தினங்களாக அமைதி நிலவி வந்த அசாம் மாநிலத்தில் மீண்டும்  கலவரம் வெடித்துள்ள நிலையில், கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 73 ஆக  உயர்ந்துள்ளது.

அசாமின் கோக்ரஜார் மாவட்டத்திலுள்ள ராணிகுலி கிராமத்தில் நேற்று துப்பாக்கியுடன்  வந்த ஒருவர் பொதுமக்களை நோக்கி சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

நள்ளிரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்குப் பிறகு கோக்ரஜார் மாவட்டத்தில் மேலும்  போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பக்கத்து மாவட்டமான சிரங் மாவட்டத்திலும்  தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
 

##~~##
அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டம் ஜெயபூர் கிராமத்தில் போடோ மலைவாழ்  இனத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது.பலியான 4  பேரும் போடோ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தொண்டர்கள் ஆவார்கள்.அவர்கள்  கொலை செய்யப்பட்டதால் கோக்ரஜார் மற்று சிரங் மாவட்டங்களில் கலவரம் பரவியது. மேலும் 4 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த கலவரத்தில் நிறைய சக்திகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், எனவே  இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க தமது அரசு முடிவு  செய்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.