Published:Updated:

வேலுமணி பெயரைச் சொல்லி மோசடி; இளைஞர் மீது சேலம் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

கமிஷனர் அலுவலகத்தில் புகார்
News
கமிஷனர் அலுவலகத்தில் புகார்

எஸ்.பி.வேலுமணியின் பெயரைப் பயன்படுத்தி, போலி நியமன ஆணை தயாரித்து வழங்கி, சேலத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

வேலுமணி பெயரைச் சொல்லி மோசடி; இளைஞர் மீது சேலம் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

எஸ்.பி.வேலுமணியின் பெயரைப் பயன்படுத்தி, போலி நியமன ஆணை தயாரித்து வழங்கி, சேலத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

Published:Updated:
கமிஷனர் அலுவலகத்தில் புகார்
News
கமிஷனர் அலுவலகத்தில் புகார்

எஸ்.பி.வேலுமணியின் பெயரைப் பயன்படுத்தி, போலி நியமன ஆணை தயாரித்து வழங்கி, சேலத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சமீபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக மனு அளிக்க வந்திருந்தனர். அவர்களில், சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரிடம் பேசினோம். அப்போது அவர், ``கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஓட்டுநராகப் பணியாற்றிவருவதாக எங்களிடம் அறிமுகமானார். பின்னர் அப்போது அமைச்சராக இருந்த வேலுமணியின் மூலம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி என்னிடமும், இன்னும் சிலரிடமும் 3 முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கினார்.

நாங்கள் நேரடியாகவும், வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவும் பணம் செலுத்தியிருந்தோம். அதில், குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் லெவல் ஒன்று முதல், லெவல் நான்கு வரையிலான பணிகளுக்கும், கிராம நிர்வாகச் செயல் அலுவலர் பணியையும் வாங்கித்தருவதாகக் கூறியிருந்தார். இந்தப் பணிகளுக்கெல்லாம் சுமார் மூன்று லட்சம் முதல் 8 லட்சம் வரை ஒவ்வொருவரிடமிருந்தும் பணம் பெற்றிருக்கிறார்.

வேலுமணி பெயரைச் சொல்லி மோசடி; இளைஞர் மீது சேலம் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

பணம் பெற்று நீண்ட நாள்களாகியும் வேலை வாங்கித் தராததால், பணம் கொடுத்த எல்லோரும் சுதாகரை நேரில் சென்று பார்த்தோம். அதற்கு அவர், `இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் அனைவருக்கும் சென்னையில் பணியில் சேர்வதற்கான ஆணை வழங்கப்படவிருக்கிறது. எல்லோரும் நான் சொல்லும்போது சென்னைக்கு வந்துவிடுங்கள்' எனக் கூறியிருந்தார். நாங்களும் சென்றிருந்தோம். அங்கு பணி ஆணை என்று ஒரு கடிதம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு நாங்கள் அதில் குறிப்பிட்டிருந்த தேதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, பணி நியமன ஆணையை வழங்கியபோது, அதைப் படித்துப் பார்த்துவிட்டு இது போலியான ஆர்டர் என்று அங்கிருந்த அதிகாரிகள் கூறினர்.

இது போன்று அரசாங்கத்தில் ஆர்டர் வழங்கப்பட மாட்டாது என்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் சுதாகரிடம் வந்து கேட்டோம். அதற்கு அவரிடம் எந்தவித பதிலும் இல்லை. பின்னர் எங்களுக்குத் தெரிந்த கட்சிப் பிரமுகர்களிடம் சுதாகருக்கும் அமைச்சருக்கும் பழக்கம் இருக்கிறதா என்று விசாரித்தபோது, `அதுமாதிரி எதுவும் இல்லை. அவ்வப்போது ஆக்டிங் டிரைவராகப் போவார் அவ்வளவுதான். அமைச்சரிடம் பழக்கம் இல்லை' என்றனர்.

சேலம்
சேலம்

அதன் பிறகுதான் தமிழ்நாடு முழுவதும் சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகப் பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. அதன் மூலம்தான் சுதாகரிடமிருந்து எங்களுடைய பணத்தை மீட்டுத் தரும்படி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம். மேலும் கொடுத்த பணத்தைத் திரும்பத் தரும்படி சுதாகரிடம் நேரில் சென்று கேட்டோம். அப்போது, நாங்கள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் எங்கள்மீதே காவல்துறையில் புகார் கொடுப்பதாக சுதாகரின் மனைவி பிரபாவதி, உறவினர் மகேஷ்குமார் ஆகியோர் மிரட்டுகின்றனர்” என்றார்.

இவர்களின் புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.