Published:Updated:

பாலியல் தொல்லை; தங்கை மர்ம மரணம்! -தி.மு.க நிர்வாகி செயலால் நீதி கேட்கும் சகோதரர்

தற்கொலை ( Representational Image )

``எங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவள் தானாக தூக்கிட்டு இறக்கவில்லை. அவளது மரணத்துக்கு எனது உறவினர்கள் புருஷோத்தமன் மற்றும் அவரது தம்பி தேவேந்திரன்தான் காரணம்.”

பாலியல் தொல்லை; தங்கை மர்ம மரணம்! -தி.மு.க நிர்வாகி செயலால் நீதி கேட்கும் சகோதரர்

``எங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவள் தானாக தூக்கிட்டு இறக்கவில்லை. அவளது மரணத்துக்கு எனது உறவினர்கள் புருஷோத்தமன் மற்றும் அவரது தம்பி தேவேந்திரன்தான் காரணம்.”

Published:Updated:
தற்கொலை ( Representational Image )

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்காவில் உள்ள நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், 47 வயதான சந்திரா. இவருடைய கணவர் கிருஷ்ணன், வாதநோயால் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு இரு மகள்களும் அருண் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி, கணவர் வீட்டில் வசித்துவருகிறார். இவர்களது இளைய மகளான சிந்து(பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார். சிந்துவுக்கு, அவரது பெற்றோர் திருமணத்துக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர் கடந்த ஜூன் 24-ம் தேதி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு இறந்துள்ளதாக வெளியான தகவல், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்

சிந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவலர்கள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இறுதிச்சடங்குகள் முடிந்த அடுத்த நாள், சிந்துவின் சகோதரர், அவரது தோழிகளிடம் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரித்துள்ளார்.

அப்போது, தன் தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, அவரது தாய் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்கையின் உடலைத் தொண்டி எடுத்து, மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சிந்துவின் சகோதரர் அருண், அவரை புதைத்த சுடுகாட்டில் அமர்ந்து போராட்டமும் நடத்திவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காவல்துறையில் அவர்கள் அளித்த புகாரில், ``எங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவள் தானாக தூக்கிட்டு இறக்கவில்லை. அவளது மரணத்துக்கு எனது உறவினர்கள் புருஷோத்தமன் மற்றும் அவரது தம்பி தேவேந்திரன்தான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளனர். தி.மு.க-வைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகியோர், தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படும் பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், அவருக்கு பல ஆண்டுகளாகப் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததாகவும் சிந்துவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

தற்போது திருமண ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில், இதுதொடர்பான பிரச்னைகளால் அவளை இவர்கள் கொலை செய்திருக்கலாம் அல்லது தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இதனால், மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது சகோதரர் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

சிந்துவின் குடும்பத்தினர், இதுதொடர்பாக தேவேந்திரன் மற்றும் புருஷோத்தமனிடம் விசாரிக்கச் சென்றபோது, அவர்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், தி.மு.க-வைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டியதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``செங்கல்பட்டு நைனார்குப்பம் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில், இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்க வேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை தி.மு.க இளைஞரணி வலியுறுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism