Published:Updated:

தி.மலை: 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய் - குடும்ப பிரச்னை காரணமா?

நீரில் மூழ்கி உயிரிழப்பு

குடும்ப பிரச்னை காரணமாக 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற தாய், தானும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தி.மலை: 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய் - குடும்ப பிரச்னை காரணமா?

குடும்ப பிரச்னை காரணமாக 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற தாய், தானும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Published:Updated:
நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அடுத்துள்ள சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (30). இவருக்கு ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் திருமணமாகி, 5, 4 வயதில் இரு மகன்களும் 7 மாதமே ஆன ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளனர். அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வந்த தன் மூத்த மகனை நேற்று மதியம் பள்ளிக்கு சென்று அழைத்துவந்த ராணி, மற்ற இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு சென்றுள்ளார். தற்போது பொழிந்து வரும் கனமழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், திடீரென தனது 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசிய ராணி, தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், ராணியையும் மூன்று குழந்தைகளையும் மீட்டுள்ளனர். இதில், மூன்று குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராணியை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த மூன்று குழந்தைகளின் உடல்களையும் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணாபுரம் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், மூன்று குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இது சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், ராணிக்கும் அவரது கணவர் பரசுராமனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படும் நிலையில், அண்மையில் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் ராணி, மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.