Published:Updated:

சென்னை: ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு; படியிலிருந்து கீழே விழுந்து பலியான வடமாநில இளைஞர்..!

ரயிலில் செல்போன் பறிப்பு - வாலிபர் பலி
News
ரயிலில் செல்போன் பறிப்பு - வாலிபர் பலி

சென்னையில் ஓடும் ரயிலில் மர்ம நபர்கள், வடமாநில இளைஞரிடம் செல்போனைப் பறிக்க முயன்றபோது அவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு; படியிலிருந்து கீழே விழுந்து பலியான வடமாநில இளைஞர்..!

சென்னையில் ஓடும் ரயிலில் மர்ம நபர்கள், வடமாநில இளைஞரிடம் செல்போனைப் பறிக்க முயன்றபோது அவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ரயிலில் செல்போன் பறிப்பு - வாலிபர் பலி
News
ரயிலில் செல்போன் பறிப்பு - வாலிபர் பலி

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்கத்திலிருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த ரயிலில் மேற்கு வங்க மாநிலம், சாந்த்ராகாச்சி பகுதியைச் சேர்ந்த ரோனி சேட் என்ற 24 வயது இளைஞர் சென்னைக்குக் கட்டட வேலை பார்க்க வந்துகொண்டிருந்தார். வழக்கமாக கொருக்குப்பேட்டைப் பகுதியில் ரயில் சிக்னலுக்காக மெதுவாகச் செல்லும். அதேபோல, அந்த ரயிலும் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.

மரணம்
மரணம்

ரோனி சேட் ரயில் படியில் அமர்ந்து தன்னுடைய போனைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ரயில் தண்டவாளத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர், அவரின் போனைப் பறித்திருக்கிறார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரோனி சேட் போனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், அந்த மர்மநபர் போனைப் பிடித்து இழுத்திருக்கிறார். இதில், படியில் அமர்ந்திருந்த ரோனி சேட் செல்போனோடு ரயிலிலிருந்து கீழே விழுந்ததில், அவரின் தலையில் பலமாக அடிபட்டது. இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

ரோனி சேட் கீழே விழுந்ததைக் கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து வந்த போலீஸார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரோனி சேட்டை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும், அவர் உயிரிழந்த சம்பவம் அவரின் உறவினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை

இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (19), விஜய் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அந்த இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.