Published:Updated:

உதய்பூர் படுகொலை: கொலையாளிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பெற்ற வாகன எண்! - காவல்துறை வெளியிட்ட தகவல்

கொலையாளிகள் பயன்படுத்திய வாகனம் ( ட்விட்டர் )

உதய்பூர் கொலையாளிகளின் வாகன எண்கள் மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேதியைக் குறிப்பிடுவதாக இருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

உதய்பூர் படுகொலை: கொலையாளிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பெற்ற வாகன எண்! - காவல்துறை வெளியிட்ட தகவல்

உதய்பூர் கொலையாளிகளின் வாகன எண்கள் மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேதியைக் குறிப்பிடுவதாக இருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
கொலையாளிகள் பயன்படுத்திய வாகனம் ( ட்விட்டர் )

முகமது நபிகள் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து இஸ்லாமியர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்த கன்ஹையா லால் ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

அதைத் தொடர்ந்து, கன்ஹையா லால் கடைக்கு வந்த இருவர் அவரைக் கொடூரமாகக் கொலைசெய்தனர். அதைத் தொடர்ந்து இரண்டு கொலையாளிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், உதய்பூரில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கொலையாளிகள் இருவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக்குழுவுடன் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்திருக்கிரது. அதைத் தொடர்ந்து மேலும், பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையாளிகள் கொலை செய்துவிட்டுத் தப்பிக்கப் பயன்படுத்திய வாகனத்தின் எண் RJ 27 AS 2611. இந்த எண்கள் மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேதியைக் குறிப்பிடுவதாக காவல்துறை விளக்கமளித்திருக்கிறது.

கொலையான கன்ஹையா லால்
கொலையான கன்ஹையா லால்

மேலும், கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி, தனது மோட்டார் சைக்கிளுக்கு 2611 என்று எழுதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பெறக் கூடுதலாக ரூ. 5,000 கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பொதுவாக ஃபேன்சி எண்ணைத்தான் கூடுதல் கட்டணம் கட்டிப் பெறுவார்கள். ஆனால், இந்த எண் அப்படியானது இல்லை. இருந்தபோதும், அந்த எண்தான் வேண்டும் எனக் கூடுதல் கட்டணம் செலுத்தி அதைப் பெற்றிருக்கிறார்கள்.

மேலும், காவல்துறை விசாரணையில், ரியாஸ் அக்தாரி 2014-ல் நேபாளத்துக்குச் சென்றதாகவும், அவர் பாகிஸ்தானுக்கு அழைக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.