Published:Updated:

பொய் வழக்கு பதிய கஞ்சா வாங்கிய இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்! - தேனியில் நடந்தது என்ன?

இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

தேனியில் கஞ்சா வியாபாரியுடன் காவல்துறையினர் கூட்டு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொய் வழக்கு பதிய கஞ்சா வாங்கிய இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்! - தேனியில் நடந்தது என்ன?

தேனியில் கஞ்சா வியாபாரியுடன் காவல்துறையினர் கூட்டு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுப்பதற்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை ஒரு மாதத்துக்கு நடத்தப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவித்திருந்தார். அதனபடிப்படையில், பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் பதுக்கல் முற்றிலுமாக தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவந்தனர். தொடர்ச்சியாக கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்வோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டி.ஜி.பி அறிவுறுத்தியிருந்தார்.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

இந்த நிலையில், தேனியில் கஞ்சா வியாபாரியுடன் காவல்துறையினர் கூட்டு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை
சித்தரிப்புப் படம்

தேனி அல்லிநகரம் காவல் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் கண்ணா. இவர் தேனி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில், சக்கரைபட்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான காட்டுராஜா (35) என்பவரை கைது செய்வதற்கு, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு கஞ்சா வியாபாரியான ஈஸ்வரன் என்பவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சாவை வாங்கி வருமாறு அல்லிநகரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த முதல் நிலை காவலர்களான ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகியோரிடம் கூறியுள்ளார்.

கஞ்சா
கஞ்சா
சித்தரிப்புப் படம்

இதற்கிடையே போதைப்பொருள் தடுப்பு தனிப்படை காவல் ஆய்வாளர் கண்ணன், கஞ்சா வியாபாரியான ஈஸ்வரனை கைது செய்து, அவர் வைத்திருக்கும் கஞ்சாவை பறிமுதல் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தார். ஆனால் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உத்தரவுக்கு கட்டுப்பட்டு, அல்லிநகரம் முதல்நிலை காவலர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகியோர் ஈஸ்வரன் வீட்டிற்கு கஞ்சா வாங்கிவரச் சென்றனர். ஆனால் ஈஸ்வரனோ தன்னை போலீஸார் பிடித்துவிடுவார்களோ என பயந்து வேறொரு நபரைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியிருந்தார். அதன்படி போலீஸார் அந்த நபரிடம் ஒன்னரை கிலோ கஞ்சாவை வாங்கினர். ஆனால் தனிப்படை இன்ஸ்பெக்டரால் பிரச்னை ஏற்படுமோ என பயந்து காவலர் ராஜா தனது வீட்டில் வைத்துக்கொண்டு கஞ்சா வாங்கியது குறித்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணாவிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

தேனி எஸ்பி
தேனி எஸ்பி

முதல்நிலை காவலர் ராஜா கஞ்சா வாங்கியது சில நாள்களுக்கு பிறகு ஆய்வாளர் ராஜேஷ் கண்ணாவுக்கு தெரியவர, காவலர் ராஜா வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஒன்றரை கிலோ கஞ்சாவை கைபற்றியது மட்டுமல்லாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்த புகார் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் முதல்நிலை காவலர்களான ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விசாரணை செய்யவும் உத்தரவிட்டார். இந்த விசாரணையில் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உத்தரவிட்டதன் அடிப்படையிலே கஞ்சா வாங்கிவந்ததாக முதல் நிலை காவலர்கள் மூவரும் கூறியது அம்பலமாகி உள்ளது. அதனடிப்படையில் அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மற்ற 3 போலீஸாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கஞ்சா
கஞ்சா

ராஜேஷ் கண்ணா போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றிய போது, கஞ்சா வியாபாரிகளிடம் நெருங்கிப் பழகியுள்ளார். அவர்களிடம் இருந்து மாதந்தோறும் வசூல்செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சட்டம்-ஒழுங்கு பணிக்கு வந்தவுடன் பெரிய அளவில் வருமானம் இல்லாமல், பொய் வழக்கு போட்டு கஞ்சா வியாபாரிகளிடம் பணத்தைக் கறக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

தமிழக அளவில் கஞ்சா விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினாலும், போதைப்பொருள் விற்பனைக்கு போலீஸாரே உடந்தையாக இருக்கின்றனர் என்பது பெரும் முரணாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism