Published:Updated:

`போலீஸார் என்னை கொடூரமாக தாக்கினர்!' - சாதி பாகுபாடு என சிறையில் உண்ணாவிரம் இருக்கும் சாலமன்

கைதுசெய்யப்பட்ட சாலமன் மற்றும் துண்டறிக்கை

சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதிவெறி ஒழிக்கப்படவில்லை’ என வேதனை தெரிவித்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும்படியாக நடந்திருக்கிறது காஞ்சிபுரம் பால்நெல்லூர் கிராம சம்பவம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

`போலீஸார் என்னை கொடூரமாக தாக்கினர்!' - சாதி பாகுபாடு என சிறையில் உண்ணாவிரம் இருக்கும் சாலமன்

சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதிவெறி ஒழிக்கப்படவில்லை’ என வேதனை தெரிவித்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும்படியாக நடந்திருக்கிறது காஞ்சிபுரம் பால்நெல்லூர் கிராம சம்பவம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட சாலமன் மற்றும் துண்டறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் இருக்கிறது, பால்நெல்லூர் ஊராட்சி. பல்வேறு சமூகத்தினர் வாழும் இந்த கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் நேரு என்பவர், கடந்த நவம்பர் 14-ம் நாள் கிராமப் பொதுகூட்டத்துக்கு அழைப்புவிடுத்து, ஊர் மக்களிடம் துண்டறிக்கை விநியோகம் செய்திருக்கிறார். அந்த துண்டறிக்கையில், ``கிராம பண்ணையாளர்கள் நியமித்தல், கிராம வேலைக்காரர்கள் நியமித்தல்" பற்றி கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், கொதிப்படைந்த அந்த கிராமத்தின் பட்டியல் சமூக மக்கள், `பழைய சாதிய வடிவங்களை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் ஊராட்சித் தலைவரின் செயல்பாடு' இருப்பதாகக்கூறி, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

பால்நெல்லூர் கிராமப் பொதுக்கூட்டத்தின் சாதி சர்ச்சையை ஏற்படுத்திய துண்டறிக்கை
பால்நெல்லூர் கிராமப் பொதுக்கூட்டத்தின் சாதி சர்ச்சையை ஏற்படுத்திய துண்டறிக்கை

மேலும், அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணியைச் சேர்ந்த சாலமன் என்பவரின் உதவியுடன், `சாதி ஆதிக்க நோக்கில் செயல்படும், ஊராட்சி மன்றத் தலைவர் நேருவை, 1989 எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும் எனவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பெரும்புதூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பால்நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரன் தெரிவிக்கிறார். இதுகுறித்துப் பேசிய குமரன், ``ஊராட்சித் தலைவர் நேருவின் சாதியப் போக்கை கண்டித்து, அவரை கைதுசெய்யக்கோரியும், நாங்கள் அளித்த புகார்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும், எங்கள் ஊரைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் நாங்களும், தோழர் சாலமன் மற்றும் அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி அமைப்பினரும் இணைந்த்து நவம்பர் 24-ம் நாள் திருப்பெரும்புதூரில் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினோம். அப்போதே, காவல்துறையினர் ஆர்பாட்டம் நடக்கவிடாமல் செய்வதற்காக பல்வேறு கெடுபிடிகளைச்செய்தனர்.

காவல்துறைக்கும் எங்களுக்கும் வாக்குவாதம்கூட நடந்தது. அதன்பின்னர், நவம்பர் 30-ம் தேதி, பால்நெல்லூர் ஊராட்சித் தலைவர் நேரு தலைமையில் மீண்டும் கிராமப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்குச்சென்ற நாங்கள் `குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நேருவின் தலைமையில் எப்படி கிராமப் பொதுக்கூட்டம் நடத்தலாம்' என நியாமாக கேள்வி எழுப்பினோம். ஆனால், அப்போதும் எங்களை கேள்விகேட்க விடாமல், அதிகாரிகள் வெளியேற்றினர்.

அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி
அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி

இந்த நிலையில்தான், டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சாலமனை, ஆறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலவந்தமாக கைதுசெய்து, பொதுமக்கள் முன்னிலையில் அடித்து இழுத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், சம்மந்தப்பட்ட திருப்பெரும்புதூர் காவல்நிலையத்துக்கு கொண்டுசெல்லாமல், 30 கி.மீ. தொலைவில் உள்ள மணிமங்கலம் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று, காவல்துறையினர் கடுமையாக தாக்கியிருக்கின்றனர்" எனக்கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இதுகுறித்து பேசிய அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநில இணையமைப்பாளர் மோகன், ``ஏற்கெனவே, கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான சுவரொட்டி பரப்புரையின்போது 14 வயது பட்டியல் சமூகச் சிறுவனை திருப்பெரும்புதூர் காவல் நிலையக்காவலர் ஒருவர் மிரட்டினார். இதனைக்கண்டு பரப்புரையில் ஈடுபட்டிருந்த தோழர் சாலமன் உட்பட மற்ற தோழர்கள் குழந்தைகளுக்கு எதிரான இப்போக்கை கண்டித்தனர். அதுமட்டுமின்றி அந்த காவலர் மீது நடவடிக்கை கோரியும் புகார் மனு அளிக்கவும் இருந்தனர். அதன்பிறகு அந்த காவலர் அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடத்தில் மன்னிப்பு கேட்டதன் பேரில் புகார் அளிக்கும் நடவடிக்கையை தோழர்கள் கைவிட்டனர்.

அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநில இணையமைப்பாளர் மோகன்
அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநில இணையமைப்பாளர் மோகன்

ஆனால் அந்த காவலர், தோழர் சாலமன் மீது பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும்,ரோந்து பணியின்போது அச்சுறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் பொய் புகார் அளித்து, ஆர்பாட்டத்திற்கு முன்னரே வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மேலும், ஆர்ப்பாட்ட தினத்தன்று பல்வேறு இடையூறுகளை சாதிய மனோபாவத்துடன் மேற்கொண்டனர் காவலர்கள். இவற்றையெல்லாம் அப்போதே எங்கள் தோழர்கள் கடுமையாக கண்டித்திருக்கின்றனர். இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், முன்னர் பதியப்பட்ட அந்த வழக்கின் அடிப்படையில் எங்கள் தோழர் சாலமனை வலுக்கட்டாயமாக கைதுசெய்திருக்கின்றனர். கைதுசெய்ததோடு மட்டுமல்லாமல், அடித்து சித்தரவதை செய்திருக்கின்றனர்.

குறிப்பாக, ``நேரு ***(சாதிப்பெயர்), நல்ல ***(சாதிப்பெயர்)" என்று சொல்லச்சொல்லி தோழர் சாலமனின் பிறப்புறுப்பிலேயே தாக்கியிருக்கின்றனர். இவையெல்லாம் உயரதிகாரியின் தூண்டுதலின் பெயரியே நடத்தப்பட்டிருக்கிறது. கடுமையான காயங்களுடன் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்ட சாலமனுக்கு, மருத்துவ சிகிச்சைக்குக்கூட அனுமதிக்காமல் ரிமாண்ட் செய்து சிறையிலடைத்திருக்கின்றார்கள்" என தெரிவித்தார்.

காயங்களுடன் சாலமன்
காயங்களுடன் சாலமன்

மேலும், நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் பேசிய சாலமன், `தன்னை காவல்துறையினர் சித்தரவதை செய்ததாகவும், ஆபாச வார்த்தைளில் திட்டி தனது பிறப்புறுப்பை நசுக்கியதாகவும்’ கூறினார். தற்போது செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாலமன், `ஊராட்சித் தலைவர் பால்நெல்லூர் நேரு மீதும், தன்னைத் தாக்கிய திருபெரும்புதூர் காவல்துறையினர்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்த உயரதிகாரி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்களை பணிநீக்கம் செய்யவேண்டும் எனக்கோரியும், சிறையிலேயே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

சாலமன்
சாலமன்

இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்பதற்காக, பால்நெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் நேருவுக்கு தொடர்புகொண்டோம். ஆனால், அதுகுறித்து பேச அவர் மறுத்துவிட்டார்.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதிவெறி ஒழிக்கப்படவில்லை" என வேதனை தெரிவித்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும்படியாக நடந்திருக்கிறது காஞ்சிபுரம் பால்நெல்லூர் கிராம சம்பவம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism