Published:Updated:

நடிகர் திலீப் ஒப்படைத்த 6 மொபைல்போன்கள்... அந்த `மேடம்' யார்?! - போலீஸ் தீவிர விசாரணை

நடிகர் திலீப்

திலீப் அதிகாரிகளுக்கு எதிராகச் சதிசெய்ய ஆலோசனை நடத்திய சமயத்தில் `` `மேடம்' அனுபவிக்கவேண்டிய தண்டனையை நான் அனுபவிக்கிறேன்" எனக் கூறியிருந்தார். அந்த மேடம் யார் என்ற விவதம் கடுமையாக எழுந்துள்ளது.

நடிகர் திலீப் ஒப்படைத்த 6 மொபைல்போன்கள்... அந்த `மேடம்' யார்?! - போலீஸ் தீவிர விசாரணை

திலீப் அதிகாரிகளுக்கு எதிராகச் சதிசெய்ய ஆலோசனை நடத்திய சமயத்தில் `` `மேடம்' அனுபவிக்கவேண்டிய தண்டனையை நான் அனுபவிக்கிறேன்" எனக் கூறியிருந்தார். அந்த மேடம் யார் என்ற விவதம் கடுமையாக எழுந்துள்ளது.

Published:Updated:
நடிகர் திலீப்

கேரள நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோவாகப் பதிவுசெய்த வழக்கில் நடிகர் திலீப் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்த போலீஸ் அதிகாரிகளைப் பழிவாங்க திலீப் சதித்திட்டம் தீட்டியதாக, அவரின் முன்னாள் நண்பரும், சினிமா இயக்குநருமான பாலச்சந்திரகுமார் தெரிவித்தார். மேலும் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை திலீப் பார்த்ததாகவும், நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய பல்சர் சுனியை ஏற்கெனவே திலீப்புக்குத் தெரியும் எனவும், அதை வெளியே சொன்னால் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்பதால் யாரிடமும் சொல்ல வேண்டாம் என திலீப் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் பாலச்சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விசாரணை அதிகாரிகளைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது க்ரைம் பிராஞ்ச் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். அந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்யக் கூடாது என முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசரித்த நீதிமன்றம், முன்ஜாமீன் கொடுத்ததுடன், க்ரைம் பிராஞ்ச் போலீஸார் மூன்று நாள்கள் விசாரிக்கவும் அனுமதி கொடுத்தது. மூன்று நாள்களாக 33 மணி நேரம் திலீப்பிடம் விசாரணை நடைபெற்றது.

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்த நிலையில் திலீப் உள்ளிட்டவர்களின் போன், விசாரணைக்கு வேண்டும் என க்ரைம் பிராஞ்ச் போலீஸார் நீதிமன்றத்தில் கேட்டிருந்தனர். அதே சமயம் தனது முன்னாள் மனைவி (நடிகை மஞ்சுவாரியர்) குறித்த சில ஆவணங்கள் மொபைல்போனில் இருப்பதாகவும், போலீஸுக்குக் கீழ் உள்ள க்ரைம் பிராஞ்ச் போன்ற ஏஜென்சிகளிடம் போன் பரிசோதனைக்கு விடக் கூடாது. மொபைல்போனில் போலீஸார் கிரிமினல் வேலைகள் செய்யக்கூடும் எனவும் திலீப் கூறியிருந்தார். அவரது வாதங்களை மறுத்த நீதிமன்றம், மொபைல்போன்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் அலுவலகத்தில் நேற்று ஆறு மொபைல்போன்களை ஒப்படைத்தார் திலீப். அதில் திலீப்புக்குச் சொந்தமானவை மூன்று மொபைல்போன்கள். திலீப்பின் சகோதரர் அனூப்பின் இரண்டு போன்கள், திலீபின் உறவினரான அப்பு என்ற கிருஷ்ணபிரசாத்தின் ஒரு போன் ஆகிய ஆறு போன்கள் ஒப்படைக்கப்பட்டன. அதேசமயம் ஏழு போன்களை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் நடிகர் திலீப் ஒரு ஐபோனை ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், நீதிமன்றம் கூறும் அந்த ஐபோனை தான் உபயோகிக்கவில்லை என திலீப் கூறிவருகிறார்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

இது ஒருபுறம் இருக்க திலீப், அதிகாரிகளுக்கு எதிராகச் சதிசெய்ய ஆலோசனை நடத்திய சமயத்தில் `` `மேடம்' அனுபவிக்கவேண்டிய தண்டனையை நான் அனுபவிக்கிறேன்" எனக் கூறியதாக பாலச்சந்திரகுமார் போலீஸிடம் தெரிவித்தார். அந்த மேடம் யார் என்ற விவாதம் கடுமையாக எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகைக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோவை திலீப்புக்குக் கொடுத்த அந்த வி.ஐ.பி யார் என்ற கேள்விக்கும் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் விடை தேடிவருகிறது. இதற்காக திலீப்பை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் போலீஸார் கேட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism