Published:Updated:

6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை... போதைப்பொருள் புகாரிலிருந்து ஆர்யன் கான் விடுவிப்பு!

ஆர்யன் கான்

குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் உட்பட 5 பேர் பெயர்கள் இடம் பெறவில்லை. மேலும் ஆர்யன் கானுக்கு எதிராகப் போதிய ஆதாரம் இல்லை என்றும், அவரிடம் போதைப்பொருள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை... போதைப்பொருள் புகாரிலிருந்து ஆர்யன் கான் விடுவிப்பு!

குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் உட்பட 5 பேர் பெயர்கள் இடம் பெறவில்லை. மேலும் ஆர்யன் கானுக்கு எதிராகப் போதிய ஆதாரம் இல்லை என்றும், அவரிடம் போதைப்பொருள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published:Updated:
ஆர்யன் கான்

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். மும்பையிலிருந்து கோவா சென்ற ஆடம்பரக் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்திய போது ஆர்யன் கானும் அவருடன் ஏழு பேரும் கைதுசெய்யப்பட்டனர். ஆர்யன் கான் நான்கு வாரம் வரை சிறையில் இருந்தார். இவ்வழக்கில் மொத்தம் 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இவ்வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர்.

ஆர்யன்கான்
ஆர்யன்கான்

அதன் பிறகு இதை விசாரித்த சமீர் வான்கடே மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீர் வான்கடே ஷாருக் கானை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், சாதிச் சான்றிதழைத் திருத்தி மோசடி செய்தததாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டினார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணையிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டார். டெல்லியிலிருந்து சிறப்பு விசாரணைக்கு குழு வந்து இவ்வழக்கை விசாரித்துவந்தது. இந்நிலையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 6,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்யன் கான், ஷாருக்கான்
ஆர்யன் கான், ஷாருக்கான்

அதில் ஆர்யன் கான் உட்பட ஐந்து பேர் பெயர்கள் இடம்பெறவில்லை. மேலும் ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்றும், அவரிடம் போதைப்பொருள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கடந்த மார்ச் மாதமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் தாக்கல் செய்யவில்லை. 90 நாள்கள் அவகாசம் கொடுக்கும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு கேட்டுக்கொண்டது. இதையடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் 60 நாள்கள் அவகாசம் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டிருப்பது குறித்து இவ்வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சமீர் வான்கடேயிடம் கேட்டதற்கு, ``சாரி நான் இதில் கருத்து தெரிவிக்க முடியாது. நான் இப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது குறித்து ஆர்யன் கானுக்காக வாதாடிய வழக்கறிஞர் முகுல் கூறுகையில், ஷாருக் கான் இப்போது நிம்மதி அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism