Published:Updated:

`ஆயுதங்கள் கேட்பவர்களின் விவரங்களை வாங்குங்கள்!’ - பட்டறை உரிமையாளர்களுக்குக் காவல்துறை உத்தரவு

யாரேனும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைச் செய்யச் சொல்லிக் கேட்டால் அவர்களின் விவரத்தைக் கேட்டுப் பெறுங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``உங்களால் இனி ஒரு உயிர் போய்விடக் கூடாது. நீங்கள் சரியாக நடந்துகொண்டால் இது போன்ற உயிரிழப்புகள் நடக்காது. யாரேனும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைச் செய்யச்சொல்லிக் கேட்டால், அவர்களின் முழுமையான விவரத்தை வாங்கிப் பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று போலீஸார் பட்டறை உரிமையாளர்களிடம் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

பட்டறை தொழிலாளி
பட்டறை தொழிலாளி

திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, வேலூர் போன்ற மாநகரங்களில் பழிக்குப் பழி படுகொலைகள் அதிகரித்துவிட்டன. `திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமாகிவிடும்’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டி.ஜி.பி சைலேந்திர பாபுவிடம் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

அதன்படி காவல்துறை உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, ரெளடிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தடதடத்தது போலீஸ் வட்டாரம். இந்த ‘ஸ்டார்மிங் ஆபரேஷ’னுக்கு அதிகாரிகள் மத்தியில் வைக்கப்பட்ட பெயர் `ஆபரேஷன் டிஸ் ஆர்ம்.’ செப் 23-ம் தேதி இரவில் தொடங்கிய இந்த ஆபரேஷனில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரெளடிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

கைது
கைது

அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள்கள் என ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ரெளடிக்களிடம் விசாரித்ததில், இரும்புப்பட்டறையில் இது போன்ற அபாயகரமான ஆயுதங்கள் தயாரிப்பதாகத் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்பேரில் தமிழகம் முழுவதுமுள்ள பட்டறைத் தொழிலாளர்கள், உரிமையாளர்களை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறார்கள் காவல்துறையினர்.

அறிவுரை வழங்கும் போலீஸார்
அறிவுரை வழங்கும் போலீஸார்

அந்த வகையில், திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயனின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாநகரத்தில் ஆயுதங்கள் தயாரிக்கும் தயாரிப்பு பட்டறையின் உரிமையாளர்களிடம் போலீஸார் ஆலோசனை நடத்தினார்கள். திருச்சியில் ஆறு இடங்களில் ஆலோசனை, விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

`எங்க உயிருக்கு ஆபத்து!' - சொல்கிறார்கள் நிர்மலாதேவி கொலை வழக்கில் சரண்டரான 5 பேர்

அதில் பேசிய போலீஸார். ``இங்குள்ள சிலர் ரெளடிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள்தான் ஆயுதங்கள் செய்து கொடுப்பதாகத் தகவல் வருகிறது. இனிமேல் இதுபோல் செய்யாதீர்கள். உங்களால் இனி ஒரு கொலையும் நடக்கக் கூடாது.

அறிவுறை வழங்கும் போலீஸார்
அறிவுறை வழங்கும் போலீஸார்

நீங்கள் சரியாக நடந்துகொண்டால் இது போன்ற உயிரிழப்புகள் நடக்காது. யாரேனும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைச் செய்யச்சொல்லிக் கேட்டால், அவர்கள் குறித்த முழுமையான விவரத்தை வாங்கிப் பதிவு செய்துகொள்ளுங்கள். அதேபோல் உங்களது பட்டறைகளில் கண்டிப்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

பட்டறை தொழிலாளி
பட்டறை தொழிலாளி

மேலும் குற்றச் சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் முன்கூட்டியே போலீஸாருக்குத் தகவல் கொடுங்கள். அவர்கள் கொடுக்கும் தகவல் கண்டிப்பாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். நீங்கள் கொடுக்கும் தகவல்கள்தான் எங்களுக்கு முக்கியம்” என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

டி.ஜி.பி சைலேந்திர பாபு, இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்குச் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். அதில், ``அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களைக் கண்டறிய வேண்டும். அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைபேசி எண், எந்தக் காரணத்துக்காக வாங்குகிறார் போன்றவற்றைப் பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும்.

`ஆயுதங்கள் கேட்பவர்களின் விவரங்களை வாங்குங்கள்!’ - பட்டறை உரிமையாளர்களுக்குக் காவல்துறை உத்தரவு

விவசாயம் வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காகக் கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் விற்பனை செய்யக் கூடாது. கண்காணிப்பு கேமராக்களை பட்டறைகளில் பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் சிரமம் இருந்தால் காவல்துறை உதவி செய்ய வேண்டும். குற்றவாளிகள் பற்றிய தகவல்களைக் காவல்துறைக்கு வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு