Published:Updated:

`நுபுர் ஷர்மாவின் தலையைக் கொண்டு வந்தால் எனது வீட்டைத் தருவேன்’ - அஜ்மீர் தர்கா மதகுரு கைது

கைதான சல்மான்

பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்த அஜ்மீர் தர்கா மதகுரு கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

`நுபுர் ஷர்மாவின் தலையைக் கொண்டு வந்தால் எனது வீட்டைத் தருவேன்’ - அஜ்மீர் தர்கா மதகுரு கைது

பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்த அஜ்மீர் தர்கா மதகுரு கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கைதான சல்மான்

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இரண்டு பேர் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் இப்போது நுபுர் ஷர்மா தலைமறைவாக வாழ்ந்துவருகிறார். அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில் அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஷ்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மாவின் தலையைக் கொண்டு வந்தால் அவர்களுக்கு எனது வீட்டைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நபிகள் நாயகத்தை அவமதித்தற்காக அவரைப் பொது இடத்தில் சுட்டுக்கொன்றிருப்பேன். நீங்கள் அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் பதிலளித்துவிட்டீர்கள். நான் இப்போது ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரிலிருந்து இதைத் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

மூன்று நிமிடங்கள் பேசப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து அவர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அதோடு நள்ளிரவில் அவரைக் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி விகாஷ் கூறுகையில், ``சல்மான் மீது ஏற்கெனவே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சல்மான் பேசும்போது மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சல்மான் தெரிவித்திருக்கும் கருத்துக்கு அஜ்மீர் தர்கா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதோடு அவரின் கருத்துக்கும், தர்காவுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே மேலும் பல பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!