Published:Updated:

மெஹுல் சோக்‌ஷியை அழைத்து வர கமாண்டோ போலீஸ் - டொமினிகாவில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ.அதிகாரிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோக்‌ஷி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோக்‌ஷி ( ANI )

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெஹுல் சோக்‌ஷியை கைது செய்து அழைத்துவர அமலாக்கப்பிரிவு மற்றும் கமாண்டோ படை வீரர்களுடன் சி.பி.ஐ.அதிகாரிகள் டொமினிகாவில் முகாமிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பஞ்சாப் நெஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக வைர வியாபாரிகள் நீரவ்மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்‌ஷி ஆகியோர் இருவேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் நீரவ்மோடி லண்டனில் இருந்தபோது கைது செய்யபட்டுள்ளார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் மெஹுல் சோக்‌ஷி ஆண்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று பதுங்கியிருந்தார். அவரையும் இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு ஆண்டிகுவா நாட்டிடம் கேட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மெஹுல் சோக்‌ஷி படகு மூலம் அருகில் உள்ள டொமினிகா நாட்டிற்குச் சென்றார். செல்லும்போது தன்னுடன் பெண் ஒருவரையும் அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் காதல் பயணம் சென்று இருக்கலாம் என்று ஆண்டிகுவா நாட்டு பிரதமர் புரொவுன் தெரிவித்திருந்தார்.

சிறையில் சோக்‌ஷி
சிறையில் சோக்‌ஷி

ஆனால் டொமினிகாவில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இப்போது டொமினிகா நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஆண்டிகுவாவிற்கு நாடு கடத்தவேண்டாம் என்றும் நேரடியாக இந்தியாவிற்கே அனுப்பி விடுங்கள் என்று ஆண்டிகுவா பிரதமர் புரொவுன் டொமினிகா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்குள் சோக்‌ஷி டொமினிகா கோர்ட்டில் தன்னை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்திக்கொண்டுவர கதாரில் இருந்து தேவையான ஆவணங்களுடன் தனியார் விமானம் ஒன்று டொமினிகாவிற்கு ஏற்கனவே சென்றடைந்துள்ளது. தற்போது புதுடெல்லியில் இருந்து மேலும் ஒரு விமானம் டொமினிகா புறப்பட்டு சென்றுள்ளது. எப்படியும் சோக்‌ஷியை இந்தியாவிற்கு நாடு கடத்திக் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதற்காக அந்த விமானத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இரண்டு பேர், சி.பி.ஐ.அதிகாரிகள் இரண்டு பேர், மத்திய தொழில் பாதுகாப்புபடை கமாண்டோக்கள் இரண்டு பேர் , மத்திய வெளியுரவுத்துறை அமைச்சக அதிகாரிகள் இரண்டு பேர் என தனிக்குழு டொமினிகாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் அவர்கள் புறப்பட்டு சென்றதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இதனை உறுதிபடுத்தவில்லை. தனியார் விமானம் ஒன்று தேவையான ஆவணங்களுடன் டொமினிகாவில் முகாமிட்டு இருப்பதாக ஆண்டிகுவா பிரதமர் புரொவுன் தெரிவித்துள்ளார். ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது புரொவுன் இதனைத் தெரிவித்தார். இரண்டாம் தேதி டொமினிகா கோர்ட்டில் மெஹுல் சோக்‌ஷிக்கு எதிரான மனு விசாரணைக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து மெஹுல் சோக்‌ஷியை இந்தியாவிற்கு நாடு கடத்திச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று புரொவுன் தெரிவித்தார். மே 26-ம் தேதி டொமினிகாவில் கைது செய்யப்பட்ட சோக்‌ஷியை 2-ம் தேதிவரை காவலில் வைக்க அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு மீண்டும் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்படி வரும்போது சோக்‌ஷியை நாடு கடத்த அனுமதிக்கும் பட்சத்தில் அவரை அழைத்து வரவே சி.பி.ஐ.அதிகாரிகள் கமாண்டோக்களின் துணையோடு டொமினிகாவில் முகாமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் நடந்த வங்கி மோசடிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இந்த மோசடியை தொடர்ந்தே பெரும்பாலான அரசு வங்கிகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு