Published:Updated:

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை! - போலீஸ் தீவிர விசாரணை

என்.டி.ஆர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை

கே.உமா மகேஸ்வரி, ஹைதராபாத்தில் தனது வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை! - போலீஸ் தீவிர விசாரணை

கே.உமா மகேஸ்வரி, ஹைதராபாத்தில் தனது வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
என்.டி.ஆர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை

ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் கே.உமா மகேஸ்வரி, ஹைதராபாத்தில் தனது வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே, கே.உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்றுவந்துவந்தார். இந்த நிலையில் கே.உமா மகேஸ்வரி, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கே.உமா மகேஸ்வரி
கே.உமா மகேஸ்வரி

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து உமா மகேஸ்வரியின் உடலை மீட்ட போலீஸார், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். இது குறித்து ஊடகத்திடம் பேசிய ஜூப்ளி ஹில்ஸ் பகுதி காவல் ஆய்வாளர் ராஜசேகர் ரெட்டி, ``இதுவொரு தற்கொலை. விசாரணைக்குப் பின்னரே தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும்" எனக் கூறினார்.

என்.டி.ஆர் மகள் தற்கொலை விவகாரம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!