Published:Updated:

ஓய்வுபெற்ற எஸ்.ஐ-யிடம் லஞ்சம் கேட்டு போலீஸில் சிக்கிய வி.ஏ.ஓ; கொண்டாட்டத்தில் மக்கள் - என்ன நடந்தது?

கைது (மாதிரி படம்) ( pixabay )

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் பட்டா பிரித்து வழங்க ரூ.3,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்சஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற எஸ்.ஐ-யிடம் லஞ்சம் கேட்டு போலீஸில் சிக்கிய வி.ஏ.ஓ; கொண்டாட்டத்தில் மக்கள் - என்ன நடந்தது?

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் பட்டா பிரித்து வழங்க ரூ.3,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்சஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

Published:Updated:
கைது (மாதிரி படம்) ( pixabay )

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரான இவர் தன் சகோதரர்கள் பெயரில் உள்ள கூட்டுப் பட்டாவை பிரித்து, தனிப் பட்டாவாக மாற்றுவதற்காக புல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷை அணுகியுள்ளார்.

அவர் பட்டாவை மாற்றுவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணி, இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்
கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி உன்னிக்கிருஷ்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையிலான போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை மணியிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

போலீஸார் அறிவுறுத்தலின்படி, மணி புல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார். அதை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சதீஷை கையும் களவுமாக கைது செய்தனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி உன்னிக்கிருஷ்ணனிடம் கேட்டபோது,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மணி, தன் சகோதரர்கள் பெயரிலுள்ள கூட்டுப் பட்டாவை தனிப் பட்டாவாக மாற்றுவதற்காக வி.ஏ.ஓ சதீஷிடம் சென்றுள்ளார். அவரை பல மாதங்களாக அலைக்கழித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் மணி வி.ஏ.ஓ சதீஷிடம் தன்னால் அடிக்கடி அலைய முடியவில்லை. விரைந்து பட்டாவை மாற்றிக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சதீஷ் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுங்கள் முடித்து கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

இதுகுறித்து அவர் எங்களிடம் புகார் அளித்தார். பின்னர் எங்களது அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய நோட்டை சதீஷிடம் கொடுக்க வைத்து அவரை கைது செய்துள்ளோம்.

ஆனால், இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வி.ஏ.ஓ சதீஷ் கைது செய்யப்பட்டதை அந்த கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாட தொடங்கி விட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, இவர் காசு வாங்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டார் எனவும், காசு கொடுக்கவில்லை என்றால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலைக்கழிப்பார் எனவும் அடுக்கடுக்காக குற்றம்சாட்டினர். இவர் எப்போது இங்கிருந்து போவார் என தாங்கள் எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் தெரிவித்தனர். அதையடுத்து, நான் நேரில் சென்று மக்களிடம் பேசினேன். கைதான சதீஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism