Published:Updated:

இல்லாத பெயரில் போலி மகளிர் சுயஉதவிக்குழு - லட்சக்கணக்கில் மோசடி செய்த பேரூராட்சி நிர்வாகம்!

லஞ்ச ஒழிப்புத்துறை  சோதனை
News
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சோதனையின்போது, கணக்கில் வராத 4.5 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சில முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றிச் சென்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகாவுக்குட்பட்ட ஜெகதளா பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் சிலர் கட்டுமான அனுமதி மற்றும் போலியான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் முறைகேடாக வருவாய் ஈட்டிவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்குப் புகார்கள் பறந்தன.

லஞ்ச ஒழிப்புத்துறை  சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதைத் தொடர்ந்து, நேற்று மதியம் திடீரென ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையின்போது, கணக்கில் வராத 4.5 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சில முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றிச் சென்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் விசாரித்தபோது, ``இல்லாத பெயரில் போலி மகளிர் சுயஉதவிக்குழு உருவாக்கி, கையாடல் செய்திருக்கின்றனர். சோதனையில் கணக்கில் வராத 4,53,600 ரூபாய் ரொக்கம் சிக்கியிருக்கிறது. இளநிலை உதவியாளர் கருமலையப்பன், மற்றொரு பணியாளரிடம் விசாரணை நடத்திவருகிறோம். மேலும் ஒரு சில பேரூராட்சிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் வந்திருக்கின்றன. அது குறித்தும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz