Published:Updated:

தங்கமணி ஆடிட்டர் அலுவலகம் உட்பட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
News
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டாம் கட்டமாக இன்றும் சோதனை நடத்திவருவது, தங்கமணி தரப்பை ஆடிப்போக வைத்திருக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அவர் மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய மூன்று பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்திலிருக்கும் தங்கமணி வீட்டில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 15-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அதேபோல, ஈரோடு, கோவை, சென்னை, கரூர், சேலம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சோதனையில், ரூ.2.16 கோடி ரொக்கம், 1.13 கிலோ தங்கம், சுமார் 40 கிலோ வெள்ளி, ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.

லஞ்சஒழிப்புத்துறை சோதனை
லஞ்சஒழிப்புத்துறை சோதனை

இந்த நிலையில், மேற்படி சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், பள்ளிப்பாளையத்திலிருக்கும் தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மொத்தம் 14 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீஸார் ஆய்வு செய்தபோது, தங்கமணியின் கணக்கு விவரங்களை பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆடிட்டர் செந்தில்குமார் என்பவர் தணிக்கை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து, பள்ளிப்பாளையம் பேப்பர் மில் ரோட்டிலிருக்கும் அவருக்குச் சொந்தமான இரண்டு ஆடிட்டர் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எழிலரசி தலைமையில் ஐந்து பேர்கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.

தங்கமணிக்கு, செந்தில்குமார் கடந்த 20 வருடங்களாகப் பணிபுரிந்துவருவதாகவும் சொல்கிறார்கள். செந்தில்குமாரிடம், தங்கமணிக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் தணிக்கை செய்த விவரங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதில் பல தகவல்களை ஆடிட்டர் செந்தில்குமார் அளித்ததாகத் தெரிகிறது.

ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகம்
ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகம்

இதேபோல, பொத்தனூர் பகுதியிலிருக்கும் தொழிலதிபர் சண்முகம் என்பவருடைய வீடு, அவர் நடத்திவரும் குடிநீர்த் திட்டப் பணிகளுக்கான ராட்சத சிமென்ட் குடிநீர் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை, கோழிப்பண்ணை உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர். இன்று ஒரே நாளில் நாமக்கல்லில் 10 இடங்கள், சேலத்தில் ஓர் இடம், ஈரோட்டில் மூன்று இடங்கள் எனத் தங்கமணிக்குத் தொடர்புடையவர்களின் 14 இடங்களில் அதிரடியாகச் சோதனை நடைபெற்றுவருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கடந்த 15-ம் தேதி கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் காட்டி லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

``தங்கமணி சம்பந்தப்பட்ட 69 இடங்களில் கடந்த 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, தங்கமணிக்கு எதிராகப் பெரிய அளவில் ஆவணங்கள் சிக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் சிக்காததால், தங்கமணியின் ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனை நடத்துகின்றனர். இதன் மூலம், தங்கமணிக்கு எதிராகப் பெரிய 'பிடி' கிடைக்கும் என போலீஸார் நினைக்கின்றனர்" என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.