Published:Updated:

கவரிங் நகைகளை அடமானம் வைத்து மோசடி... ஆரணி கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு!

ஆரணி கூட்டுறவு நகர வங்கி

ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறது.

கவரிங் நகைகளை அடமானம் வைத்து மோசடி... ஆரணி கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு!

ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஆரணி கூட்டுறவு நகர வங்கி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கூட்டுறவு நகர வங்கியில், போலியான நபர்களின் பெயர்களில், 8.4 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம்வைத்து, 2.39 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது, கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, சென்னை வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில், செய்யாறு துணைப் பதிவாளர் புகார் செய்தார். அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் விசாரணை நடத்தி, புகாருக்குள்ளான ஆரணி கூட்டுறவு நகர வங்கி மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், எழுத்தர் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த அசோக்குமாரின் பதவியும் பறிக்கப்பட்டது.

ஆரணி கூட்டுறவு நகர வங்கி
ஆரணி கூட்டுறவு நகர வங்கி

தொடர்ந்து, திருவண்ணாமலை வணிக குற்றப்பிரிவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, மோசடி உறுதியானது. இதையடுத்து, தலைவர் அசோக்குமார், மேலாளர் லிங்கப்பா உள்ளிட்ட பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். மேலும், கூட்டுறவு வங்கி துணைத் தலைவராக இருந்த ஆனந்த் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும், துறைரீதியான விசாரணை தொடர்ந்தது. இந்த நிலையில், ஆரணி நகரக் கூட்டுறவு வங்கியின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் தகவல் அளிக்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டதாகவும் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகியோர் நிரந்தரப் பணி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!