Published:Updated:

காஞ்சிபுரம்: `மாமூல் விவகாரம்: கடையை அடித்து நொறுக்கிய ரௌடிகள்!' - அச்சத்தில் காஞ்சிபுரம் மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடையை அடித்து நொறுக்கிய ரௌடிகள்
கடையை அடித்து நொறுக்கிய ரௌடிகள்

காஞ்சிபுரத்தில் மீண்டும் ஸ்ரீதரின் ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இவர்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் பெருநிறுவனங்களிடமும், முதலாளிகளையும் தொலைபேசி மூலமாக மாமூல் கேட்டு மிரட்டுகிறார்கள்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரௌடியான ஸ்ரீதர், தலைமறைவாக இருந்துவந்தார். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார். இவரின் மறைவுக்குப் பின்னர், காஞ்சிபுரத்தில் ஸ்ரீதரின் இடத்தைக் கைப்பற்ற அவரின் ஆதரவாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டனர். இந்த தொழில் போட்டி காரணமாகக் காஞ்சிபுரத்தில் கொலை, அடிதடி குற்றங்கள் அதிகரித்தன. அதனால், போலீஸார் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்ட தனிகா, தினேஷ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ரௌடிகளை கைது செய்தனர். அதையடுத்து, மாவட்டத்தில் குற்றங்கள் குறையத் தொடங்கின.

கடையை அடித்து நொறுக்கிய ரௌடிகள்
கடையை அடித்து நொறுக்கிய ரௌடிகள்

இந்த நிலையில், சமீபகாலமாகக் காஞ்சிபுரத்தில் மீண்டும் ஸ்ரீதரின் ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இவர்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் பெருநிறுவனங்களிடமும், முதலாளிகளையும் தொலைபேசி மூலமாக மாமூல் கேட்டு மிரட்டுகிறார்கள். மிரட்டப்படும் நபர்களும், ரௌடிகளுக்குப் பயந்து காவல்நிலையத்தில் புகாரளிப்பதும் கிடையாது. இந்த நிலையில், நேற்று (17.11.2021) ஸ்ரீதரின் கூட்டாளியான ஏட்டுப் பிரபு என்பவரின் வீட்டுக்கு, ரௌடிகள் சிலர் பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்திருக்கின்றனர்.

அடுத்த தாதா யார்? - ஸ்ரீதர் ஆதரவாளர்களுக்குள் நடக்கும் ‘கேங் வார்’

உள்ளே நுழைந்தவர்கள் ஏட்டுப் பிரபுவைத் தாக்க முயன்றிருக்கின்றனர். அப்போது அவரை காப்பாற்ற அவர்களின் மகன்கள் கமலேஷ், ஜனார்த்தன் முயற்சி செய்த நேரத்தில், அந்த ரௌடி கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டது. படுகாயமடைந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏட்டுப் பிரபுவைத் தாக்கிய அதே ரௌடி கும்பல், அங்கிருந்து காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் இருக்கும் ஸ்ரீராம் என்பவரின் கடைக்குள் நுழைந்திருக்கிறது. அப்போது கடை உரிமையாளர் அவர்கள் கேட்ட மாமூலை தரமறுத்ததால் அந்த கடையை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

கடையை அடித்து நொறுக்கிய ரௌடிகள்
கடையை அடித்து நொறுக்கிய ரௌடிகள்

மேலும் அதே தெருவில் இருக்கும் மற்றொரு சூப்பர் மார்க்கெட்டிலும் உள்ளே நுழைந்து பொருள்களைச் சூறையாடியிருக்கிறார்கள். இதற்கும், மாமூல் கேட்டபோது தர மறுத்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜமன்னார், வெங்கடேசன் ஆகிய இருவரையும் இதே ரௌடி கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றது. இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மீண்டும் காஞ்சிபுரம் பகுதியில் ரௌடிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதால் மக்கள் பீதியடைந்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு