Published:Updated:

கொடநாடு: அடுத்த கட்டத்துக்கு நகரும் வழக்கு ; கார் ஏற்பாடு செய்தவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை!

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

கொடநாடு வழக்கு புலன்விசாரணையின் முக்கியத் திருப்புமுனையாக கருதப்படும் கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய கார் உரிமையாளர்களிடம் ஊட்டியில் மூன்று மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த மூன்ரு ஆண்டுகளாகத் தொடர் பரபரப்பு திருப்பங்களைக் கண்டுவரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்போது காவல்துறை தரப்பில் கூடுதல் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாகக் காவல்துறையால் சேர்க்கப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கும் சயானிடம் கடந்த மாதம் 17-ம் தேதி கூடுதல் விசாரணையைத் தொடங்கியது தனிப்படை.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

இதைத் தொடர்ந்து கனகராஜின் சகோதரர் தனபால், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சம்பவம் நடந்த தினத்தன்று நைட் டூட்டி பார்த்த காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள், மின்வாரிய அதிகாரிகள் என அடுத்தடுத்து அதிரடி விசாரணையை நடத்திவந்தனர்.

முக்கியச் சாட்சியங்களில் ஒன்றாகக் கருதப்படும் கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய கார் உரிமையாளர்களிடம் ஊட்டியில் இன்று சுமார் மூன்று மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றது. இவர்களின் சாட்சியங்கள் இந்த வழக்கின் முக்கியத் திருப்புமுனையாக இருக்கும் என விசாரணைக் குழுவினர் கருதுகின்றனர்.

கொடநாடு வழக்கு: எஸ்டேட் மேனேஜரிடம் 2 மணி நேரத்துக்கு மேல் நடந்த ரகசிய விசாரணை! - அடுத்து என்ன?
கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

சாட்சி விசாரணை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட உளவுத்துறை அதிகாரி ஒருவர், ``கொள்ளைக்கு இந்தக் கும்பல் பயன்படுத்திய இன்னோவா கார் உரிமையாளர்கள் நவ்ஷத், அந்த காரை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த ஏஜென்ட் நௌஃபல் [41 மற்றும் 42 வது சாட்சிகள்] இருவரையும் இன்று ஊட்டிக்கு வரவழைத்து, டி.ஐ.ஜி முத்துசாமி, நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத் முன்னிலையில் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் பிறகு இந்த விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு