Published:Updated:

மீஞ்சூர்: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை - மனைவி, மகள் கண்முன்னே நடந்த கொடூரம்

ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் திரைப்படங்களில் வரும் காட்சிபோல, திட்டமிடப்பட்டு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மீஞ்சூர்: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை - மனைவி, மகள் கண்முன்னே நடந்த கொடூரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் திரைப்படங்களில் வரும் காட்சிபோல, திட்டமிடப்பட்டு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க-வை சேர்ந்த மனோகரன் (50) பதவி வகிக்கிறார். மேலும், இவர் அதிமுகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராகவும் இருந்துவருகிறார். மனோகரன், நேற்று மாலை (15.05.2022) குருவிமேடு பகுதியில் ஒரு விழாவுக்குச் சென்றுவிட்டு, தனது காரில், மனைவி மற்றும் மகள்களுடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன்
ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன்
Durairaj G

குருவிமேடு பகுதியில் காரில் வந்துகொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று மனோகரனின் கார் மீது வேகமாக மோதியது. லாரி மோதியதில் நிலைகுலைந்த கார் அங்கிருந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. லாரியிலிருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்ட மர்மக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில், மனைவி மற்றும் மகள்களின் கண்முன்னே மனோகரனை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனோகரனை அருகிலிருந்தவர்கள் மீட்டுள்ளனர். அவரை, விம்கோ நகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மனோகரனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீஸார், மனோகரனின் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மனோகரன்
மனோகரன்

இந்த சம்பவமறிந்த அந்த பகுதி மக்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட மனோகரன் இரண்டாவது முறையாகக் கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர் என்று அந்த பகுதி மக்கள் கண்ணீர் வடித்தனர். சாலை மறியலால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், கொலையாளி விரைவில் கைதுசெய்யப்படுவர் என்று உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்த மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மனோகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் சம்பவம் உயர்வு குறித்து அந்த தொழிற்சாலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தினருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனோகரன் மீது மீஞ்சூர் பகுதி காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மனோகரன் பயணித்த கார்
மனோகரன் பயணித்த கார்

மேலும், மனோகரன், ரியல் எஸ்டேட் தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் செய்துவந்துள்ளார். இந்த கொலை தொழில் விரோதம் காரணமாக நடந்ததா, அரசியல் காரணமாக நடந்ததா இல்லை வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், கொலை நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் துணை ஆய்வாளர் தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போலத் திட்டமிட்டு கொடூரமாகப் படுகொலை கொலை செய்யப்பட்டுள்ளது, அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism