கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும், சிலர் போலியான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் கொடுத்து பணியில் சேர்ந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், சி.ஆ.ர்.பி.எப்., அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்துள்ள 200-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள்... தமிழக தேர்வுத் துறையில் வழங்கியது போலப் போலியான மதிப்பெண் சான்றிதழை வழங்கி பணியில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிக்கியது எப்படி?
மத்திய அரசுப் பணியில் சேரும் நபர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைப் பரிசோதனை செய்யச் சம்பந்தப்பட்ட தேர்வுத்துறைக்கு அந்த சான்றிதழ்கள் அனுப்பிவைக்கப்படும். அப்படி, சமீபத்தில் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்க்கப்பட்டவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்தபோது பலரின் சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. இதேபோல, இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களிலும் 200-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த போலியான ஆவணங்களில் அரசுத் தேர்வுத் துறையின் பெயரில் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. மேலும், சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பார்த்தபோது தகவல்கள் சரியானதாக இல்லை. கொடுக்கப்பட்டிருந்த போலிச் சான்றிதழ்கள் அனைத்துமே மிகவும் எளிமையாகக் கண்டறியும் வகையிலிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலிச் சான்றிதழ் கொடுத்துள்ள நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கச் சம்பந்தப்பட்ட துறைக்கு அரசுத் தேர்வுகள் துறை பரிந்துரை செய்துள்ளது.