Published:Updated:

திருவள்ளூர்: மருத்துவமனைக்குச் செல்லும்போது தப்பியோடிய கைதி - நடந்தது என்ன?!

தப்பியோடிய குற்றவாளி

திருவள்ளூர் மாவட்டத்தில் கைதி ஒருவரைப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பியோடியிருக்கிறார்.

திருவள்ளூர்: மருத்துவமனைக்குச் செல்லும்போது தப்பியோடிய கைதி - நடந்தது என்ன?!

திருவள்ளூர் மாவட்டத்தில் கைதி ஒருவரைப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பியோடியிருக்கிறார்.

Published:Updated:
தப்பியோடிய குற்றவாளி

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகிலுள்ள நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கும் அதே பகுதியில் வசித்துவரும் விக்னேஷ் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் விக்னேஷ் நாகராஜைக் கத்தியால் வெட்டியிருக்கிறார். இது குறித்து நெற்குன்றம் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள் (50) மகன் பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விக்னேஷ்
விக்னேஷ்

இந்தப் புகாரின் அடிப்படையில் விக்னேஷை போலீஸார் தேடிவந்தனர். தன்மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விக்னேஷ், கடந்த 1-ம் தேதி பாப்பாத்தி அம்மாள் வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசினர். அதிர்ஷ்டவசமாக, இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும், எந்தக் காயமும் ஏற்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரபு வழங்கிய புகாரின் அடிப்படையில் சோழவரம் பகுதி காவல்துறையினர் தலைமறைவாக இருந்த விக்னேஷைத் தேடிப்பிடித்து கைதுசெய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்ய பூதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

சோழவரம் காவல் நிலையம்
சோழவரம் காவல் நிலையம்

அப்போது போலீஸ் வாகனத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். தப்பியோடிய கைதியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். காவல்துறை கண்காணிப்பிலிருந்த கைதி தப்பியோடிய விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism