Published:Updated:

அதிகரித்த தற்கொலை, விபத்துகள்... தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்களும் தமிழ்நாடும்!

தற்கொலை மற்றும் விபத்துகள் - தமிழ்நாடு

சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்களில் தமிழ்நாட்டில் அதிக அளவிலான தற்கொலை மற்றும் விபத்துகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதிகரித்த தற்கொலை, விபத்துகள்... தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்களும் தமிழ்நாடும்!

சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்களில் தமிழ்நாட்டில் அதிக அளவிலான தற்கொலை மற்றும் விபத்துகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

Published:Updated:
தற்கொலை மற்றும் விபத்துகள் - தமிழ்நாடு

கடந்த 2021-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் நடைபெற்ற குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்ட விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தில் நாட்டில் நடைபெற்ற தற்கொலையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலிருப்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல, சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்:

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் மொத்தமாக 60,96,310 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறன. இவற்றில், நாடு முழுவதும் 1,49,404 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 19,173, மகாராஷ்டிராவில் 17,261, உத்தரப்பிரதேசத்தில் 16,838 குற்றங்கள் நடந்துள்ளன. இந்த வரிசையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 6,064 குற்றங்கள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான 4,28,278 குற்றங்கள் நடந்திருக்கிறன. இவற்றில், உத்தரப்பிரதேசத்தில் 56,083, ராஜஸ்தானில் 40,738, மகாராஷ்டிராவில் 39,526 குற்றங்கள் நடந்திருக்கிறன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்கள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதேபோல, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை/கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றங்களைப் பொறுத்தவரை நாடு முழுவதும் 293 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் உத்தரப்பிரதேசத்தில் 48, அஸ்ஸாம் 47, மத்தியப் பிரதேசத்தில் 38 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில், தமிழ்நாட்டிலும் ஐந்து குற்றங்கள் நடந்திருக்கின்றன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

கொலைக் குற்றங்கள்:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற மொத்த கொலைக் குற்றங்கள் 29,272. இவற்றில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 3,717 கொலைகளும், பீகாரில் 2,799 கொலைகளும், மகாராஷ்டிராவில் 2,330 கொலைகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 1,686 கொலைக் குற்றங்கள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைகள்:

தொழில் சார்ந்த பிரச்னைகள், பொருளாதார நெருக்கடி, மனநலப் பிரச்னை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, குடும்பப் பிரச்னை, வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் நாட்டில் தற்கொலை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு 1,53,052 தற்கொலைகள் பதிவாகியிருந்தன. இந்த எண்ணிக்கை, 2021-ம் ஆண்டு 1,64,033 -ஆக உயர்ந்திருப்பது பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது.

தற்கொலை
தற்கொலை

நாட்டில் நடந்த மொத்த தற்கொலைகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,207 தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 18,925-ம், மத்தியப் பிரதேசத்தில் 14,965 தற்கொலைகளும் நடந்திருக்கின்றன. மேலும், மத்தியப் பிரதேசத்தில் 14,965, மேற்கு வங்கத்தில் 13,500, கர்நாடகத்தில் 13,056 தற்கொலைகளும் நடந்திருக்கின்றன. நாடு முழுவதும் நடைபெற்ற மொத்த தற்கொலைகளில் மேலே சொல்லப்பட்ட ஐந்து மாநிலங்களில் மட்டுமே 50 சதவிகிதத் தற்கொலைகள் நடந்திருக்கின்றன.

சாலை விபத்து:

கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 4,22,659 விபத்துகள் நடைபெற்றிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துகளில் 3,71,884 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 1,73,860 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 24,711 பேர், தமிழ்நாட்டில் 16,685 பேர், மகாராஷ்டிராவில் 16,446 பேர், மத்தியப் பிரதேசத்தில் 13,755 பேர், ராஜஸ்தானில் 10,698 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில், ரயில் விபத்துகள், ரயில்வே கிராஸிங் விபத்துகள் உட்பட பல்வேறு விபத்துகள் அடங்கும்.

சாலை விபத்து
சாலை விபத்து

இரண்டு சக்கர வாகன விபத்தைப் பொறுத்தவரை, 69,240 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் 8,259 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைவிட இரண்டு சக்கர வாகன விபத்து அதிகரித்த மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 2020-ம் ஆண்டு 46,443-ஆக இருந்த விபத்து எண்ணிக்கை, 2021-ம் ஆண்டு 57,090-ஆக உயர்ந்திருக்கிறது. மொத்தம் நடந்திருக்கும் விபத்துகளில் 20 சதவிகித விபத்துகள் இரவு நேரங்களில் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தற்கொலைகளில் தமிழ்நாடு இரண்டாம் இடம். மொத்த விபத்துகளில் இரண்டாம் இடம். அதேபோல, சாலை விபத்து அதிகரித்திருப்பதில் முதல் இடம். இரவு நேரம் அதிகம் சாலை விபத்து நடப்பதில் முதல் இடம் என்று தமிழ்நாடு பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. நாடு முழுவதும் பெருநகரங்களில் ஏற்பட்ட விபத்துகளில் அதிகப்படியாக, தலைநகர் சென்னையில்தான் 5,034 விபத்துகள் நடந்திருக்கின்றன. இந்தப் பட்டியலைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டில் சென்னை இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

அதிகரித்திருக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் குறித்து, தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தமிழ்நாட்டில் சிறிய கிராமங்கள் முதல் பெருநகரம் வரை அனைத்துப் பகுதிகளிலும் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துக் குற்றங்களுக்கும் முதல் தகவல் அறிக்கை உடனடியாகப் பதிவுசெய்யப்படுகிறது. பல மாநிலங்களில் அப்படிச் செய்யப்படுவது கிடையாது. குற்றங்கள் எண்ணிக்கை அதிகமாகத் தெரிய இது ஒரு முக்கியக் காரணம்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.