Published:Updated:

லஞ்சப் புகார் குறித்து விசாரிக்கச் சென்றவரே லஞ்சம் வாங்கினாரா..? - பரபரக்கும் தென்காசி பஞ்சாயத்து!

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
News
லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற இந்தக் குழுவினரே லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒன்றியத்திலிருக்கும் செயல் அலுவலர்கள், பி.டி.ஓ-க்கள் கணக்குகளில் குளறுபடி செய்ததும் லஞ்சம் பெற்றதும் தெரியவந்திருக்கிறது.

தணிக்கைக்குழு உதவி இயக்குநர்கள் ஆய்வு
தணிக்கைக்குழு உதவி இயக்குநர்கள் ஆய்வு

கணக்கு தணிக்கையில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊராட்சிகளுக்கான கணக்குகளைக் கடந்த 29-ம் தேதி தென்காசி மாவட்ட உள்ளாட்சித்துறை தணிக்குக்குழு உதவி இயக்குநர்கள் முகம்மது லெப்பை, உமாசங்கர் ஆகியோர் மறு தணிக்கை செய்தனர் . அப்போது தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற இந்தக் குழுவினரே லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஊராட்சிகளின் கணக்குகளிலிருந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, தணிக்கைக்குழுவைச் சேர்ந்த இரு அதிகாரிகளும், லஞ்சமாகப் பணம் பெற்றதாக நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார், தணிக்கை நடந்த ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சோதனையின்போது, கணக்கில் வராத 88,000 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாகத் தணிக்கைக்குழு உதவி இயக்குநர்கள் முகமது லெப்பை, உமாசங்கர், தணிக்கை ஆய்வாளர்கள், பஞ்சாயத்துச் செயலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், தென்காசி மாவட்ட உள்ளாட்சித்துறை தணிக்கைக்குழு உதவி இயக்குநர் முகம்மது லெப்பை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மூன்று மணி நேரம் நீடித்த சோதனையில், வீட்டிலிருந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.

லஞ்சம் பெற்றதாக புகாருக்கு உள்ளான அதிகாரி வீடு
லஞ்சம் பெற்றதாக புகாருக்கு உள்ளான அதிகாரி வீடு

ஊராட்சி ஒன்றிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதில் தொடர்புடைய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்த முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தென்காசி மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் பதற்றம் நிலவுகிறது.