Published:Updated:

தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்... தடுப்பது எப்படி?! - அதிர்ச்சி பின்னணி

சைபர் க்ரைம்

விபத்து நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோமோ?.. அதுதான், உயிரை காப்பாற்றும். அதுபோல, சைபர் க்ரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்துக்குள் தகவல் கொடுத்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்கமுடியும்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்... தடுப்பது எப்படி?! - அதிர்ச்சி பின்னணி

விபத்து நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோமோ?.. அதுதான், உயிரை காப்பாற்றும். அதுபோல, சைபர் க்ரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்துக்குள் தகவல் கொடுத்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்கமுடியும்.

Published:Updated:
சைபர் க்ரைம்

கடந்த 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டில் 385 ஆக இருந்த குற்றங்கள், 2020-ம் ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்து 782 -ஆக அதிகரித்திருக்கின்றன. கொரோனா பொதுமுடக்க காலமான 2020-ல் இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில், 11,097 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது.

தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் கிடைத்த தகவல் படி, தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 385 சம்பவங்கள் தொடர்பாக எஃ.ஐ.ஆர். போடப்பட்டிருக்கின்றன. அடுத்து, 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு நவம்பர் இடையிலான காலகட்டத்தில் 1,125 சம்பவங்கள் தொடர்பாக எஃ.ஐ.ஆர். பதிவாகியிருக்கின்றன.

மத்திய அரசின் புள்ளிவிவரப்படியும், மாநில போலீஸ் புள்ளிவிவரப்படியும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

சென்னையில் சைபர் க்ரைம்
சென்னையில் சைபர் க்ரைம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான குற்றங்கள் மட்டுல்ல! ஏ.டி.எம், டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை மையமாக வைத்து நடக்கும் நூதன திருட்டுகளும் அதிகரிக்க முக்கிய காரணம், வங்கி வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் அனைத்து வங்கிகளும் கணக்கை இணையவழி மூலம் இணைக்கப்பட்டிருப்பதே என்கிறார்கள். இதை தெரிந்துவைத்திருக்கும் கிரிமினல்கள், வங்கியில் இருப்பவர்களின உதவியுடன் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது கவர்ச்சி வார்த்தைகளை வீசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள். இப்படி ஏமாந்தவரகள் மூலம் பதிவாகும் விவகாரங்கள் அதிகம். லேட்டஸ்ட்டாக, பிட்காயின் மாதிரி வேறுவித காயின் விற்பனைக்கு உள்ளதாக சொல்லி, அதில் முதலீடு செய்யச் சொல்லி கூட ஏமாற்றுகிறார்கள். இந்த வகை கிரிப்டோ மோசடி தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தில் சைபர் க்ரைம் சம்பவங்களுக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருபவரான வழக்கறிஞர் கார்த்திகேயன் இது தொடர்பாக நம்மிடம் பேசினார், ``நீங்கள் சொல்லும் புள்ளிவிவரங்கள் மிகவும் குறைவானவை. இதைவிட பல மடங்கு இண்டர்நெட் தொடர்பான க்ரைம் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. ஆனால், அவைகள் முடக்கப்படுகின்றன. போலீஸுக்கு போகாமல், சமாதானம் பேசி முடிக்கிறார்கள். போலீஸுக்கு போனாலும், அங்கே புகார்தாரரை குழப்பி அனுப்பிவிடுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி போகும் விவகாரங்களைத்தான் எஃ.ஐ.ஆர் போடுகிறார்கள். அந்த லிஸ்டைத்தான் நீங்கள் சொல்லுகிறீர்கள். நான் விசாரித்த ஒரு விவகாரத்தை சொல்கிறேன். எனக்கு தெரிந்தவர் சமூகத்தில் பெரிய அந்தஸ்திலிருக்கிறார். அவரின் மகளின் அரை நிர்வாண புகைப்படத்தை அனுப்பி மிரட்டி பணம் கேட்டிருக்கிறார் ஒரு மர்ம ஆசாமி.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

இல்லாவிட்டால், இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். அவருக்கு போலீஸுக்கு போக பயம். நாங்களே களம் இறங்கினோம். அந்த பெண், தனது அறையில் தனிப்பட்ட முறையில் படம் எடுத்திருக்கிறார். பிறகு அதை அழித்துவிட்டார். ஒரு கட்டத்தில், அந்த போனை ஒரு கடையில் கொடுத்துவிட்டு, வேறு புது போனை வாங்கியிருக்கிறார். இதுதான் அவர் செய்தது. பிறகு நடந்தது எதுவும் அவருக்கு தெரியாது. அந்த கடைகாரர் தரப்பில் சென்னையில் உள்ள பெரிய பஜார் ஒன்றில் இருந்து வருகிறவர்கள் பழையபோன்களை வாங்கிச் செல்வார்கள். யாரென்று தெரியாது என்று சொன்னார். சென்னையில் உள்ள பிரபல பஜார் அது! அங்கே போய் யார் குற்றவாளி என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். முதலில் சில மாணவர்களை அனுப்பி பழைய போனை காட்டி விலை கேட்டோம். அடுத்து, மாணவிகளை அனுப்பி விலை கேட்டோம். ஒரு குறிப்பிட்ட கடையில் ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு கேட்டார்கள். அப்போதுதான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு விசாரித்தபோது, அந்தக்கடைகாரன்தான் குற்றவாளி. எந்த பழைய போனை விலைக்கு வாங்கினாலும், ரெக்கவரி சாப்ட்வேர் போட்டு புகைபடங்கள், வீடியோக்களை தேடுவார்களாம். அதில் அந்தரங்கப்படம் கிடைத்தால், அதே போனில் டாடி, மம்மி என்கிற பெயரில் பதிவாகியிருக்கும் போனுக்கு பேசி மிரட்டி பணம் வசூலித்து வந்திருக்கிறார்கள். அதன் பிறகு நடவடிக்கை எடுத்தது வேறு விஷயம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகள் பாலியல் அத்துமீறல்.. கவுன்சிலிங் வரை மட்டுமே போகும். பெற்றோர்களை மிரட்டுகிறார்கள். அடுத்து இன்னொரு விவகாரத்தில் முன்னணி வங்கி ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருப்பவர், சுமார் 80 லட்ச ரூபாயை இழந்தார். அவருக்கு வேறு ஒரு வங்கியில் பெரிய பதவி வாங்கித்தருவதாக சொல்லி ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றியிருக்கிறார்கள். யாரையும் வங்கி அதிகாரி நேரில் சந்திக்கவில்லை. எல்லாமே இணையவழி தொடர்புதான். மக்களாக பார்த்து உஷாராக இருக்கவேண்டும். பணம் அக்கவுண்டை விட்டுப் போய்விட்டால், அவ்வளவுதான். அதை திரும்ப வசூலிக்கவே முடியாது '' என்றார்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

தற்போது கலிஃபோர்னியாவில் இருக்கும் சைபர் செக்யூரிட்டி நிபுணர் சண்முகவேல் சங்கரனிடம் பேசியபோது, ``இ்ன்டர்நெட் குற்றங்கள் அதிகரித்திருப்பது உண்மைதான்! அதற்கு முக்கிய காரணமே கொரோனா காலகட்டம்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் இருந்தார்கள். இவர்களை குறிவைத்து இண்டர்நெட் வழியாக பணத்தை பறிக்கும் செயல்களை தொழிட்நுட்பம் தெரிந்த கிரிமினல்கள் செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக, 2020-ம் வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சைபர் தாக்குதலில் இந்தியாவில் மட்டும் 86% அதிகரித்திருக்கிறது. 09.09.20-ல் சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கருப்பைய்யா என்ற கூலி தொழிலாளியிடம் போனில் தொட்ர்புகொண்டு வங்கி கடன் வாங்கிதருவதாக சொல்லி ஒ.டி.பி எண்ணை கேட்டுவாங்கி அவரின் கணக்கில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை மோசடி செய்தனர். பிறகு விசாரித்ததில், நாமக்கல்லில் இயங்கி வந்த் போலி கால் சென்டரை போலீஸார் முற்றுகையிட்டு, மூன்று இளம்பெண்கள் உட்பட ஐந்து பேர்களை கைது செய்தனர்.

பிரபல நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக சொல்லி போலியாக நிறுவனத்தின் பணிநியமன உத்தரவை மெயில் மூலம் அனுப்பி முன்பணம் வசூலிப்பு இன்னொரு வகை ஏமாற்று வித்தை. இப்படி சென்னை நீலாங்கரையில் அமர்நாத் என்கிற பட்டதாரியை ஏமாற்றி பணம் பறித்தனர். விவரம் போலீஸுக்குப் போய், கம்யூட்டர் இன்ஜினியர் ஒருவர் தலைமையில் இயங்கிய மோசடி கும்பலை பிடித்தனர். இவைகளை உதாரணத்துக்கு சொன்னேன்.. இவை மாதிரி திருமணத்துக்கு வரம் தேடும் வெப்-சைட்டுகள் மூலம் பெண்களை ஏமாற்றிய பலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இணையத்தில் குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை என்கிற பெயரில் நடக்கும் மோசடிகள் அதிகம். இந்த மோசடி பேர்வழிகள் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வசிப்பவர்களாக இருப்பார்கள. நாட்டுக்கு நாடு சட்டங்களும் வேறு படுகின்றன. இந்த இடைவெளியை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள்" என்றார்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

தமிழக போலீஸுல் சைபர் க்ரைம் விவகாரங்களை கூடுதல் டி.ஜி.பி-யான அம்ரேஷ் பூஜாரி கவனித்து வருகிறார். அந்த பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் பேசும்போது, ``கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் 46 இடங்களில் சைபர் காவல் நிலையங்களை அரசு தொடங்கியிருக்கிறது. சைபர் க்ரைம் சம்பவங்கள் சமீபகாலங்களில்தான் போலீஸ் பதிவேட்டில் பதியப்படுகின்றன. இதற்கு முந்தைய ஆண்டுகளில் அப்படி இல்லை. இதனால், க்ரைம் சம்பவங்கள் அதிகமானதைப்போன்று தெரிகிறது. ஆனால், அது உண்மையல்ல. 2020 நவம்பர் முதல் 2021 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 176 குற்றவாளிகளை பிடித்திருக்கிறோம். 4.8 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியிருக்கிறோம். விபத்தில் கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்வார்கள் அல்லவா? அதாவது, விபத்து நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோமோ?.. அதுதான், உயிரை காப்பாற்றும். அதுபோல, சைபர் க்ரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்துக்குள் எங்கள் 155260 என்கிற போன் எண்ணில் தகவல் கொடுத்தால், நாங்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்கமுடியும்.

பணத்தை ஏமாந்திருந்தால், அதை மோசடி பேர்வழியின் கணக்குக்கு போகமால் தடுக்கமுடியும். இப்போது நிறைய விழிப்பு உணர்வு பிரசாரங்களை செய்து வருகிறோம். மக்களிடத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது. இணையவழி குற்றச்செயலில் ஈடுபடுகிறவர் எந்த நாட்டில் இருந்தாலும், பிடிக்காமல் விடமாட்டோம். இப்போது குற்றத்துக்கான தண்டனையும் அதிகரித்திருக்கிறது. நவீன தொழில்நுட்ப யுத்திகளை நாள்தோறும் நாங்களும் கற்று வருகிறோம். அன்றாட சைபர் க்ரைம் அப்டேட்டுகளை சக அதிகாரிகளிடம் சொல்லி உஷார்படுத்தி வருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism