Published:Updated:

``ஆர்யன் கான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சதியில் ஈடுபடவில்லை!" - சிறப்பு விசாரணைக்குழு

ஆர்யன் கான்

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் எந்தவிதச் சதியிலும் ஈடுபடவில்லை என்று சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

``ஆர்யன் கான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சதியில் ஈடுபடவில்லை!" - சிறப்பு விசாரணைக்குழு

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் எந்தவிதச் சதியிலும் ஈடுபடவில்லை என்று சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

Published:Updated:
ஆர்யன் கான்

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். ஆர்யன் கான் ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே விசாரித்துவந்தார்.

ஆனால் சமீர் வான்கடே பணம் பறிப்பதற்காக இந்தக் கைது நாடகத்தை நடத்தியதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து சமீர் வான்கடே இந்த வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆர்யன் கான் வழக்கை இப்போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்துவருகிறது. இவ்விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

அதன்படி, ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பாக பெரிய அளவில் எந்தவிதச் சதியிலும் ஈடுபடவில்லை என்றும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புகொண்டிருக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. அதோடு ஆர்யன் கானை கைதுசெய்ய ரெய்டு நடத்தப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெய்டின்போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே அவரின் போனை பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதோடு ஆர்யன் கான் சாட்டிங் விவரங்களை சோதனை செய்ததிலும், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ரெய்டை வீடியோ எடுக்க வேண்டும் என்ற விதியும் பின்பற்றப்படவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளது. சிறப்பு விசாரணைக்குழுவின் விசாரணை இன்னும் முடியவில்லை. விசாரணை முடிய இன்னும் ஓரிரு மாதங்கள் பிடிக்கும் என்று விசாரணை அதிகாரி பிரதான் தெரிவித்தார்.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

ஆர்யன் கானிடமிருந்து போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படாததால் அவர்மீது போதைப்பொருள் உட்கொண்டதாக குற்றம் சுமத்தலாமா என்பது குறித்து சட்ட வல்லநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் விசாரணை அதிகாரி பிரதான் தெரிவித்தார்.

ஆர்யன் கான் கப்பலில் கைதுசெய்யப்பட்டபோது நடத்தப்பட்ட ரெய்டு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது பல்வேறு சந்தேகங்களை சிறப்பு விசாரணைக்குழு எழுப்பியிருக்கிறது. இதற்காக சமீர் வான்கடேயிடம் சிறப்பு விசாரணைக்குழு பல முறை விசாரணை நடத்தியிருக்கிறது. சாட்சிகள் மற்றும் ஆர்யன் கானுடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்யன் கான் தனது நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்டிடம் போதைப்பொருள் கொண்டுவரும்படிக் கூறவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், அது குறித்துத் தனியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கண்காணிப்புக்குழு விசாரித்துவருவதாக சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism