Published:Updated:

``ஒரு பெண்ணாக, அரசு ஊழியராக நம்பிக்கையின்றி அமர்ந்திருந்தேன்'': பில்கிஸ் பானோ வழக்கு!

ஸ்மிதா சபர்வால் ( twitter )

``நீங்கள் பெண்களை மதிப்பதாகச் சொன்னது உண்மை என்றால், குஜராத் அரசின் உத்தரவில் தலையிட்டு 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’

``ஒரு பெண்ணாக, அரசு ஊழியராக நம்பிக்கையின்றி அமர்ந்திருந்தேன்'': பில்கிஸ் பானோ வழக்கு!

``நீங்கள் பெண்களை மதிப்பதாகச் சொன்னது உண்மை என்றால், குஜராத் அரசின் உத்தரவில் தலையிட்டு 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’

Published:Updated:
ஸ்மிதா சபர்வால் ( twitter )

பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்பத்தாரைக் கொன்ற வழக்கில், குற்றவாளிகளாக 11 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். குஜராத் அரசு, அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்தது.

பில்கிஸ் பானோ
பில்கிஸ் பானோ

அரசின் இச்செயலுக்கு பலரும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்துவரும் நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் செயலாளருமான ஸ்மிதா சபர்வால், அரசின் இச்செயலுக்கு எதிராகத் தன்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பில்கிஸ் பானோவுக்கு ஆதரவாக தன்னுடைய குரலை உயர்த்தியுள்ளார், ஸ்மிதா சபர்வால். அதில், ``பில்கிஸ் பானோவின் வழக்கு தொடர்பான செய்தியைப் படிக்கும்போது, ஒரு பெண்ணாகவும், அரசு ஊழியராகவும் நான் நம்பிக்கையின்றி அமர்ந்திருந்தேன். அச்சமின்றி சுதந்திரமாக வாழும் அவளது உரிமையை நாம் பறித்துக்கொண்டு, நம்மை சுதந்திர தேசம் என்று சொல்லிக்கொள்ள முடியாது’’ எனக் கூறி, பில்கிஸ் பானோ குஜராத் அரசுக்கு தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு எழுதிய கோரிக்கையை அதோடு இணைத்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் இந்த விஷயம் குறித்து பதிவிடுகையில், ``அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிஜி, நீங்கள் பெண்களை மதிப்பதாகச் சொன்னது உண்மை என்றால், குஜராத் அரசின் உத்தரவில் தலையிட்டு 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.