Published:Updated:

விழுப்புரம்: எஸ்டிபிஐ மா.செ-க்கு தலையில் வெட்டு... டிஸ்சார்ஜ் ஆக வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு!

அக்பர் அலி.

"அடுத்த நொடியே இடுப்பிலருந்து ஒரு கத்தியை எடுத்து என் தலையிலேயே வெட்டிட்டான். ரத்தமா ஊத்துச்சு. என் கையைவெச்சு தடுத்தபோது என்னுடைய ரெண்டு வெரலும் துண்டாப்போயிருச்சு." - அக்பர் அலி.

விழுப்புரம்: எஸ்டிபிஐ மா.செ-க்கு தலையில் வெட்டு... டிஸ்சார்ஜ் ஆக வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு!

"அடுத்த நொடியே இடுப்பிலருந்து ஒரு கத்தியை எடுத்து என் தலையிலேயே வெட்டிட்டான். ரத்தமா ஊத்துச்சு. என் கையைவெச்சு தடுத்தபோது என்னுடைய ரெண்டு வெரலும் துண்டாப்போயிருச்சு." - அக்பர் அலி.

Published:Updated:
அக்பர் அலி.

விழுப்புரம் மாவட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் அக்பர் அலி. கடந்த மாதம் 20-ம் தேதி இவரை நேரில் அழைத்த ஒரு தரப்பு, கொடூரமான முறையில் வெட்டிய சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பலத்த காயங்களுடன் அக்பர் அலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களாக கூறப்படும் ஏழு பேரில், மூன்று பேர் (அசாரு, பாஷா, ரஜிப்) மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையின் தொடர்சியாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் நூர்முகமது கூடுதலாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நம்மைத் தொடர்புகொண்டு பேசிய அக்பர் அலி தரப்பினர், ``இந்தக் குற்றத்தில் தொடர்புடைய நான்கு பேர் இன்னும் காவல்துறையிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்துவருகின்றனர். இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் சிகிச்சைகூட முழுமை பெறாமல் இன்னல்பட்டுவரும் அக்பர் அலியை, டிஸ்சார்ஜ் ஆகச் சொல்லி காவல்துறை தரப்பிலிருந்து அழுத்தம் தரப்படுகிறது" என்றனர் பரபரப்புடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்பர் அலி
அக்பர் அலி

இது தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அக்பர் அலியிடம் பேசினோம். "நான் த.மு.மு.க கட்சியில் இருந்தவன். இப்போது, த.மு.மு.க கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவராக இருக்கும் முஸ்தாக், நாங்கள் எல்லாம் முன்பெல்லாம் ஒன்றாகத்தான் இருந்தோம். 2012-ம் ஆண்டு, நான், முஸ்தாக், பசல், நந்திவர்மன், ராஜ்குமார்னு மொத்தம் ஐந்து பேர் சேர்ந்து ஒரு வியாபாரம் பண்ணினோம். ராஜ்குமார் மட்டும்தான் அதைப் பார்த்துப்பாரு. மற்ற யாருடைய தலையீடும் அதுல இருக்காது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2017 போல, நான் த.மு.மு.க கட்சியிலருந்து வெளியில வந்துட்டேன். அதனால, 'நான் போட்ட முதலீட்டை மட்டும் கொடுத்துடுங்க' அப்படின்னு கேட்டேன். இப்போ... அப்போனு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அப்படி இருக்கும்போதுதான், போன மாசம் 20-ம் தேதி சாயங்காலம் 6:45 மணிக்கு, பசல் செல்போனில் இருந்த போன் வந்துச்சு. எடுத்துப் பேசியபோது, "பத்து நிமிஷம் வீட்டு வரைக்கும் வந்துட்டு போப்பா... முக்கியமான பழைய விஷயம் பேசணும்" அப்படின்னு முஸ்தாக் சொன்னாரு. நானும் அதை நம்பி முஸ்தாக் வீட்டுக்குப் போனபோது, வீட்டு மாடிக்கு வரச் சொன்னாங்க. நானும் அங்கே போனேன்.

கத்தி குத்து
கத்தி குத்து

அங்கே பார்த்தா... நந்திவர்மன், முஸ்தாக், பசல், ராஜ்குமார்னு நாலு பேர் சேர் போட்டு உட்கார்ந்திருந்தாங்க. அவங்களுக்கு எதிர்ல நான் உட்கார்ந்தேன். திடீர்னு, என்னுடைய பின்பக்கமா முஸ்தாக்கின் உறவுக்காரப் பையன் பாஷா வந்தான். அடுத்த நொடியே இடுப்புக்ருந்து ஒரு கத்தியை எடுத்து என் தலையிலேயே வெட்டிட்டான். ரத்தமா ஊத்துச்சு. என் கையவெச்சு தடுத்தபோது என்னுடைய ரெண்டு வெரலும் துண்டாப்போயிருச்சு. அப்பக்கூட இந்த நாலு பேரும் சலனமே இல்லாம உட்கார்ந்துதிருந்தாங்க. திடீர்னு, 'வெட்டாதடா'ன்னு சொன்னாங்க. அப்போதான் இரண்டு வெட்டு சேர்த்து வெட்டினான் பாஷா. ரத்தம் வடிய, நான் அப்படியே மயங்கி விழுந்துட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னே தெரியலை. எழுந்து பார்த்தப்போ, அங்க யாரையுமே காணோம். ரத்தம் சொட்டச் சொட்ட நான் கீழே இறங்கி வந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போ, "ஐயோ..! என் வீட்டுக்கு முதன்முதல்ல வந்தானே... இப்படி வெட்டிட்டானே..." அப்படின்னு ஒரு மாயை ஏற்படுத்தும்படி கத்திக்கிட்டு இருந்தார் முஸ்தாக். அவர் வீட்டுல ரெண்டு ஆம்புலன்ஸ், கார், ஆட்டோ இருக்கு. ஆனா, அதுவரைக்கும் என்னைக் அவர் காப்பாத்தவே நினைக்கலை. நானே கீழே இறங்கி வந்து, எனக்குத் தெரிஞ்சவங்க உதவியால, என்னோட வண்டியிலயே முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்குப் போய் சேர்ந்துட்டேன். எனக்கு வலிக்க வலிக்க தையல் போட்டு முடிச்சு, பெட்ல கொண்டு போய் கிடத்தினாங்க. அங்கே வந்த முஸ்தாக், "இங்க பாரு அக்பர்... ரெண்டு சின்னப் பசங்களைவெச்சிருக்க... வீட்டில் வேற ஆம்பளைங்க கிடையாது. தேவையில்லாம எங்களைக் கோத்து விட்டுடாத. இது வேற மாதிரிப் போயிடும்" அப்படின்னு பயம்புறுத்துற மாதிரிப் பேசினாரு.

சிகிச்சையில் அக்பர் அலி
சிகிச்சையில் அக்பர் அலி

உடனே போலீஸ் வந்தது. ஸ்டேட்மென்ட் கேட்டாங்க. 'எல்லாரையும் வெளியில போகச் சொல்லுங்க, தாரேன்'னு சொன்னேன். ஆனா, முஸ்தாக் கடைசிவரைக்கும் அங்கிருந்து வெளியில போகலை. அதனால என்னாலையும் எதுவும் சரியா சொல்ல முடியலை. மறுநாள் புகாராகவே கொடுத்துட்டேன். உடம்பு முடியாமப் போனதால இப்போ சென்னையிலதான் சிகிச்சை பார்த்துக்கிட்டிருக்கேன். கைதான் ரொம்ப வலியா இருக்கு. ஏற்கெனவே, ஒரு ஆபரேஷன் பண்ணிட்டாங்க. இன்னொரு ஆபரேஷன் பண்ணணும் அப்படின்னு சொல்லியிருக்காங்க. அவங்க எல்லாருமே கூட்டுச் சேர்ந்து, என்னைத் திட்டமிட்டுத்தான் அங்கே வரவழைச்சு கொலைசெய்யப் பார்த்தாங்க. சம்பந்தப்பட்ட ஏழு பேர்ல, நாலு பேர் இப்ப வரைக்கும் தலைமறைவாதான் இருக்காங்க.

தொடர்ந்து வலி தாங்க முடியாம சிகிச்சை பெற்றுவரும் என்னை, திடீர்னு டிஸ்சார்ஜ் ஆகச் சொல்லி ஹாஸ்பிடல் சைடுல இருந்தும், போலீஸ் சைடுல இருந்தும் வற்புறுத்துறாங்க" என்றார் சோகம் தாளாத குரலில்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். "விசாரணை நடைபெற்றுவருகிறது. முதற்கட்டமாக மூன்று பேரைக் கைதுசெய்திருந்த நிலையில், விசாரணையின் தொடர்ச்சியாக, ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நூர்முகமது என்பவரையும் கைதுசெய்திருக்கிறோம். மீதமுள்ள நான்கு பேரைத் தேடிவருகிறோம். மேலும் அவரை டிஸ்சார்ஜ் ஆகச் சொல்லவேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லை. அவங்க இதைவைத்து அரசியல் செய்வதற்கு நாங்கள் ஆள் கிடையாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism