Published:Updated:

``என் வேலையை முடிக்கப் பார்க்கிறார்கள்..!" - வைரலான எஸ்.ஐ-யின் ஆடியோவும், விளக்கமும்

காவலர் ஆடியோ ( சித்திரிப்புப் படம் )

நெல்லை டவுன் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முருகேசன் என்பவர் இன்று (17-ம் தேதி) தன்னுடைய உயரதிகாரிமீது புகார் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

``என் வேலையை முடிக்கப் பார்க்கிறார்கள்..!" - வைரலான எஸ்.ஐ-யின் ஆடியோவும், விளக்கமும்

நெல்லை டவுன் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முருகேசன் என்பவர் இன்று (17-ம் தேதி) தன்னுடைய உயரதிகாரிமீது புகார் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
காவலர் ஆடியோ ( சித்திரிப்புப் படம் )

காவல்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் மனஅழுத்தத்துடன் இருக்கின்றனர். அதனால் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்க தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன், சப் இன்ஸ்பெக்டர்களும் 15 நாள்களுக்கு ஒருமுறை ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறார்.

ஆனாலும், உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக காவலர்கள் மனஉளைச்சலுடன் பணியாற்றுவது இன்னும் குறைந்தபாடில்லை. நெல்லை மாநகரத்தில் கடந்த வாரத்தில் ஒரு காவலர் ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், இஸ்லாமியரான தனக்கு மொஹரம் பண்டிகைக்குக் கூட விடுப்பு அனுமதிக்க உயரதிகாரி மறுப்பதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், நெல்லை டவுன் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முருகேசன் என்பவர் இன்று (17-ம் தேதி) தன்னுடைய உயரதிகாரிமீது புகார் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவல்துறையில் சேர்ந்து கடந்த 35 வருடங்களாக நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இன்று டவுன் சந்திப்பிள்ளையார் கோயில் பகுதியில் பேருந்துப் போக்குவரத்து மிகுந்த இடத்தில், பொதுமக்கள் மற்றும் சக காவலர்கள் முன்னிலையில் அதிகாரி என்னை அவமரியாதையாகவும்... கேவலமாகவும் நடத்தியது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆடியோ
ஆடியோ

கடந்த இரு தினங்களாக எவ்வளவு வேலை செய்திருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த அவர் என் வாழக்கையைக் கெடுப்பதற்கும் என் வேலையைத் தொலைக்கச் செய்வதற்கும் அவர் அதிகாரத்தைப் பயன்படுத்த நினைக்கிறார். எதையும் செய்யத் தயங்காத அவர் என் கதையை முடிக்க நினைக்கிறார். அந்த மனக்குமுறலில் இருக்கிறேன். அதனால் அடுத்து என்ன செய்வேன் என்பதே புரியவில்லை.

எனக்கு நடந்த இந்த அவமானம் பற்றி என் குடும்பத்தினருக்கோ அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கோ தெரியவந்தால் மிகுந்த வேதனைப்படுவார்கள். காரணம் அவர்கள் என்மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார்கள். அதனால் நான் யாரிடமும் சொல்லவில்லை. காவல்துறையில் இருக்கும் என்னுடைய நண்பர்களுக்கு இந்த விவரம் தெரியவேண்டும் என்பதால் இது பற்றி பேசுகிறேன். நான் இதுவரை என் வேலையில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறேன். இதுவரை சிறிய தண்டனைகூட பெற்றதில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எதற்காக சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் அப்படி பேசியிருக்கிறார் என்பது குறித்து விசாரிக்கவிருக்கிறேன்
சரவணகுமார், துணை ஆணையர்

நெல்லை மாநகர காவலர் முருகேசன் பேசியிருக்கும் ஆடியோ வைரலாக பரவி வருகிறது. காவல்துறையினரும் இந்த விவகாரம் குறித்து தங்களுக்குள் விவாதித்து வருகிறார்கள். சப் இன்ஸ்பெக்டரின் ஆடியோ குறித்து நெல்லை மாநகர துணை கமிஷனரான சரவணகுமாரிடம் கேட்டதற்கு, ``அந்த சப் இன்ஸ்பெக்டர் சரிவர பணிக்கு வராததால் இன்ஸ்பெக்டர் கடிந்து கொண்டிருக்கிறார். அதனால் ஏதோ பேசியிருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக விசாரித்த பிறகே முழுமையாகத் தெரிவிக்க முடியும்” எனக் கூறினார்.