Published:Updated:

வருமான வரித்துறையின் நோட்டீஸ்; அதிர்ந்த தினசரி கூலித் தொழிலாளி - வரி பாக்கி எவ்வளவு தெரியுமா?

வருமான வரித்துறை

கிரிஷ் யாதவ் வருமான வரித்துறையில் பாக்கிவைத்திருப்பதாகவும், அதை உடனே செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வருமான வரித்துறையின் நோட்டீஸ்; அதிர்ந்த தினசரி கூலித் தொழிலாளி - வரி பாக்கி எவ்வளவு தெரியுமா?

கிரிஷ் யாதவ் வருமான வரித்துறையில் பாக்கிவைத்திருப்பதாகவும், அதை உடனே செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Published:Updated:
வருமான வரித்துறை

நீங்கள் தினசரி கூலி வேலை பார்த்துப் பிழைப்பு நடத்திவருபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு திடீரென ஒரு நாள் வருமான வரித்துறையிலிருந்து, `நீங்கள் வருமான வரித்துறைக்கு லட்சக்கணக்கில் பணம் பாக்கி வைத்திருக்கிறீர்கள்' என நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும்... அது போன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது.

பீகார் மாநிலத்தில், ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர் கிரிஷ் யாதவ். இவர் தினசரிக் கூலி வேலைசெய்து வருமானம் ஈட்டிவருகிறார். இவருடைய ஒரு நாள் வேலைக்கான கூலியே 500 ரூபாய்தான். இந்நிலையில், வருமான வரித்துறையிலிருந்து இவரின் பெயருக்கு வந்திருக்கும் நோட்டீஸ் ஒன்று இவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை
vikatan

அதாவது அவருக்கு வந்த நோட்டீஸில், கிரிஷ் யாதவ் வருமான வரித்துறைக்கு ரூ.37.5 லட்சம் பாக்கி வைத்திருப்பதாகவும், அதை உடனே செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த கிரிஷ் யாதவ், நேராகத் தான் வசிக்கும் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தை நாடியிருக்கிறார். பின்னர் இது குறித்துப் பேசிய அலௌலி காவல் நிலைய அதிகாரி புரேந்திர குமார், ``கிரிஷ் பகிர்ந்துகொண்ட தகவலின் அடிப்படையில், நாங்கள் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம். இது ஒரு மோசடி வழக்காகத் தெரிகிறது. மேலும் இதில் கிரிஷ் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸ் பெற்றிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.