Published:Updated:

பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குஜராத் அரசின் கொள்கை முடிவால் குற்றவாளிகள் விடுதலை

பில்கிஸ் பானோ - Bilkis Bano

பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குஜராத் அரசின் கொள்கை முடிவால் குற்றவாளிகள் விடுதலை

பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Published:Updated:
பில்கிஸ் பானோ - Bilkis Bano

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் கர்ப்பிணி பில்கிஸ் பானோ என்பவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர் குடும்பத்தினர் ஏழு பேர் கொலைசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், ஜனவரி 21, 2008 அன்று மும்பையிலுள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) நீதிமன்றம், 11 குற்றவாளிகளுக்குப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது. அதையடுத்து, 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனுவையும் மும்பை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தது.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளில் ஒருவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432,433-ன் கீழ் தண்டனையை ரத்துசெய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

பில்கிஸ் பானோ - Bilkis Bano
பில்கிஸ் பானோ - Bilkis Bano

தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த குற்றவாளியின் தண்டனையை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட கலெக்டர் சுஜல் மயாத்ரா நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அவர், ``சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்தக் குழு, கோத்ராவில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவர் குடும்பத்தார் ஏழு பேர் கொலைசெய்யப்பட்ட வழக்கில், 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு ஆதரவாக ஒருமனதாக முடிவெடுத்தது. அந்தப் பரிந்துரை மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டது" எனத் தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.