Published:Updated:

உ.பி: ``கார் கேட்டு கொடுமைப்படுத்துகிறார்!" - பாஜக பிரமுகர்மீது மனைவி வரதட்சணைப் புகார்

வரதட்சணைக் கொடுமை -

பா.ஜ.க பிரமுகர்மீது அவர் மனைவி போலீஸில் வரதட்சணைப் புகாரளித்திருக்கிறார்.

உ.பி: ``கார் கேட்டு கொடுமைப்படுத்துகிறார்!" - பாஜக பிரமுகர்மீது மனைவி வரதட்சணைப் புகார்

பா.ஜ.க பிரமுகர்மீது அவர் மனைவி போலீஸில் வரதட்சணைப் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
வரதட்சணைக் கொடுமை -

உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க சிறுபான்மை அணித் தலைவராக இருப்பவர் அதிஃப் நிஜாமி. இவர்மீது படவுன்நகர் காவல் நிலையத்தில் அவர் மனைவியும், பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவு மண்டல துணைத் தலைவருமான கஹ்கஷன் பாத்திமா புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``திருமணம் ஆனதிலிருந்து அவ்வப்போது வரதட்சணை கேட்டு என்னைத் துன்புறுத்துவார். நானும் முடிந்தவரை சமாளித்துக்கொண்டிருந்தேன்.

வரதட்சணைக் கொடுமை
வரதட்சணைக் கொடுமை
Representational image

ஆனால், சமீபகாலமாக வரதட்சணையாக கார் கேட்டு என்னை துன்புறுத்தத் தொடங்கினார். அதிகமாக அடிக்கவும் தொடங்கிவிட்டார். இவருக்கு உடந்தையாக அவரின் தாயார் மீனா என்ற ரஃபத் ஜஹானும் என்னைத் தாக்கிக் கொடுமைப்படுத்துகிறார். கடந்த 27-ம் தேதி மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டேன். அதனால் பலத்த காயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் என் கணவர், அவர் தாயார் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், அதிஃப் நிஜாமிமீது வழக்கு பதிவுசெய்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வரதட்சணை
வரதட்சணை

இது தொடர்பாக ஊடகங்களும் பேசிய கஹ்கஷன் பாத்திமா, ``இதற்கு முன் அளித்த புகாரிலும், அரசியல் அழுத்தம் காரணமாக, காவல்துறை என் கணவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதாவது உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அதிஃப் நிஜாமி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.