Published:Updated:

அயோத்தி நில சர்ச்சை: பாஜக மேயர், எம்.எல்.ஏ மீது அயோத்தி மேம்பாட்டு ஆணையம் புகார்!

மேயர் ரிஷிகேஷ், எம்.எல்.ஏ குப்தா

அயோத்தியில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக பாஜக எம்.எல்.ஏ மற்றும் மேயர் உட்பட 40 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அயோத்தி நில சர்ச்சை: பாஜக மேயர், எம்.எல்.ஏ மீது அயோத்தி மேம்பாட்டு ஆணையம் புகார்!

அயோத்தியில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக பாஜக எம்.எல்.ஏ மற்றும் மேயர் உட்பட 40 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published:Updated:
மேயர் ரிஷிகேஷ், எம்.எல்.ஏ குப்தா

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்கெனவே கோயில் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. அந்த நிலத்தை ராமர் கோயில் டிரஸ்ட் நிர்வாகம் அதிக விலை கொடுத்து வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் அயோத்தியில் மேயரின் உறவினர் உட்பட சில முக்கியப் பிரமுகர்கள், நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி ராமர் கோயில் கட்ட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தது. தற்போது அதை நிரூபிக்கும்விதமாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு அமைந்திருக்கிறது.

அயோத்தி மேம்பாட்டு ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அயோத்தி மேயர் ரிஷிகேஷ், அயோத்தி பாஜக எம்.எல்.ஏ வேத் பிரகாஷ் குப்தா உட்பட 40 பேர் அயோத்தியில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அதன் துணைத் தலைவர் விஷால் சிங் அளித்த பேட்டியில், ``அயோத்தி மேயர் உட்பட 40 பேர் தனியார் நிலத்தைச் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் அதிகப்படியான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

அயோத்தி நில சர்ச்சை: பாஜக மேயர், எம்.எல்.ஏ மீது அயோத்தி மேம்பாட்டு ஆணையம் புகார்!

அவ்வாறு கட்டப்பட்ட வீடுகள் விரைவில் இடிக்கப்படும். சட்டவிரோத நில அபகரிப்பில் ஈடுபட்ட 40 பேர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அயோத்தி மேயர் ரிஷிகேஷ், எம்.எல்.ஏ குப்தா ஆகியோர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள். அயோத்தி மேம்பாட்டு ஆணையத்துக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.

பாஜக எம்.பி.லல்லு சிங் என்பவரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``அயோத்தியில் நில மாஃபியாக்கள் அதிகமான இருக்கின்றனர். அரசு நிலத்தை சட்டவிரோதமாக மக்களை ஏமாற்றி அயோத்தி பெயரைச் சொல்லி விற்பனை செய்துவருகின்றனர். எனவே நில மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நில மோசடியில் முன்னாள் அரசு அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

நில அபகரிப்பு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான மஹந்த் ராஜு தாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார். அயோத்தியில் அரசு நிலத்தை அபகரித்து 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புக் காலனிகள் கட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.