Published:Updated:

ஆந்திரா: பிரதமருக்கு கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு எதிர்ப்பு - காங்கிரஸ் பிரமுகர்கள் கைது!

பிரதமருக்கு கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு ( ட்விட்டர் )

ஆந்திர மாநிலம், கன்னவரம் விமான நிலையத்திலிருந்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினர் 4 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

ஆந்திரா: பிரதமருக்கு கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு எதிர்ப்பு - காங்கிரஸ் பிரமுகர்கள் கைது!

ஆந்திர மாநிலம், கன்னவரம் விமான நிலையத்திலிருந்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினர் 4 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
பிரதமருக்கு கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு ( ட்விட்டர் )

ஆந்திர மாநிலம், பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, அவரின் 30 அடி உயர வெண்கலச் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் மோடி நேற்று ஆந்திரா வந்திருந்தார். விழாவில் கலந்துகொள்ள விமான நிலையத்திலிருந்து பிரதமர் ஹெலிகாப்டரில் பீமாவரம் நோக்கிச் சென்றார்.

அப்போது, ​​கேசரப்பள்ளி கிராமத்தில் கட்டப்பட்டுவரும் கட்டடத்திலிருந்து இரண்டு காங்கிரஸ் பிரமுகர்கள் 4 பேர் கட்டடத்தின் மீது ஏறி கருப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல, ஆந்திர மாநிலம், கன்னவரம் விமான நிலையத்திலிருந்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினர் 4 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

ஆந்திரா வருகை தந்த பிரதமர்
ஆந்திரா வருகை தந்த பிரதமர்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து ஆந்திர மாநில பா.ஜ.க-வினர் பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர். மேலும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் போலீஸில் புகாரளித்தனர்.

பா.ஜ.க-வினரின் புகார் தொடர்பாக விளக்கமளித்த ஆந்திரா காவல்துறை, ``பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் எந்த குறையும் வைக்கவில்லை. மேலும், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆந்திர மாநில காங்கிரஸ் அழைப்புவிடுத்திருந்தது. அதைக் கட்டுப்படுத்தி முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு
கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு
ட்விட்டர்

தற்போது கருப்பு பலூன்கள் பறக்கவிட்டவர்கள்கூட விமானநிலையத்திலிருந்து 4.5 கி.மீ தொலைவிலுள்ள கிராமத்திலிருந்துதான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.